பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

EP டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 61

செங்குத்தான அளவில் இருக்குமாறும், பின் பலகையின் இரு விளிம்புகளுக்கும் சரியான மைய இடத்திலே வளையம் அமையுமாறும், பொருத்தப்பட வேண்டும். பின் பலகையின் முன்புறத்திற்கும் வளையத்தின் உட்புற விளிம்புக்கும் இடையிலுள்ள குறைந்த தூரம் 15 சென்டி மீட்டர் இருக்க வேண்டும். 12. Lugil (The Ball)

பந்து உருண்டையாக இருக்க வேண்டும். உள்ளே இருக்கும் ரப்பராலான, காற்றடைக்கும் பையின் (Rubber Bladder) மேலுறை தோலால் அல்லது வேறு கலப்புள்ள பொருளால் அல்லது ரப்பரால் செய்யப்பட்டிருக்க வேண்டும். அதன் சுற்றளவு 74.9 சென்டி மீட்டருக்குக் குறையாமலும்,78சென்டிமீட்டருக்கு மிகாமலும் இருக்க வேண்டும். அதன் கனம் 650 கிராமுக்கு மிகாமலும் 567 கிராமுக்குக் குறையாமலும் இருக்க வேண்டும்.

பந்துக்குக் காற்றைடைக்கும் அளவு - பந்தின் அடிப்பாகம் தரைக்கு மேலே 1.80 மீட்டர் உயரம் இருக்குமாறு வைத்துக் கொண்டு, அதை மரத்தாலான தரையின் மேல் போட்டால், கீழே, விழுந்த பந்து மேலே எழும்புகிற உயரம் 1.40 மீட்டருக்கு மேல் அல்லது 1.20 மீட்டருக்குக் குறையாமல் எழும்பி விழ வேண்டும்.

நடுவர் எற்றுக் கொள்ளக் கூடியது போல, ஒரு புதிய பந்து அல்லது இரண்டு உபயோகப்படுத்திய பந்துகளை உள்ளூர் அணியினர் (Home Team) ஏற்பாடு செய்து வைத்துக் கொள்ள வேண்டும். ஏற்கெனவே பந்துகள் விளையாடப்பட்டிருந்தால், அவைகளில் நல்லதாக ஒன்றை, நடுவர் விளையாடுவதற்காகத் தேர்ந்தெடுப்பார். அந்தப் பந்தையே வெளியூர் அணி (Visiting_Team) பழகுவதற்காக எடுத்துக் கொண்டு ஆடிப் பார்க்கலாம்.

ஒரு புதுப் பந்தினை விளையாட இட்டால், எந்தக் குழுவையும் அந்தப் பந்தை ஆடுவதற்கு அனுமதிக்கக் கூடாது. விளையாட்டில் இடப்படுவதற்காகத் தரப்பட்ட உள்ளுர் அணியினரின் பந்து, நன்றாக இல்லை என்று நடுவர் கருதினால், அவர், வெளியூர் அணியினர் கொண்டு வந்த பந்து, நல்ல நிலைமையில் இருக்குமானால், அதை ஆட்டத்தில் பயன்படுத்தி விளையாட்டைத் தொடங்க, அவருக்கு அதிகாரம் உண்டு. 13. epi-LGBTib (Duration)

ஆட்ட நேரம் 4 பருவங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

10 நி - (2 நி) - 10 நி - (5 நி) - 10 நி - (2 நி) - 10 நி ஓர் அணிக்கு ஆட்டத்தில் 5 நேர ஓய்வு (Time Out) உண்டு. (1-1-1+2)