பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 விளையாட்டுக்களின் விதிகள் *ES

காரர்களின் பெயர்களையும், அணிந்துள்ள ஆட்ட எண்களையும், குழுத் தலைவனது பெயரையும், அவரது எண்ணையும் குறிக்கச் செய்ய வேண்டும். ஆடும் நேரத்தில் ஒரு ஆட்டக்காரர், தனது ஆடும் எண்ணை மாற்ற விரும்பினால், அந்த மாற்றத்தைக் குறிப்பாளரிடமும் நடுவரிடமும் அறிவித்துவிட வேண்டும். ஆள் மாற்றுதல், ஓய்வு நேரம் பெறுவது என்பதெல்லாம் பயிற்சியாளராலேயே செய்யப்பட வேண்டும்.

ஆட்டம் தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாக, முன்னரே கொடுத்துள்ள ஆட்டக்காரர்கள், குழுத்தலைவன், ஆடும் எண், ஆடக்கூடியவர்கள் போன்ற விவரங்களை நன்கு உறுதி

செய்திட வேண்டும்.

குழுத் தலைவனே பயிற்சியாளராகப் பணியாற்றலாம். ஒரு சில முறையான காரணங்களால் குழுத் தலைவன் ஆடுகளத்தை விட்டு வெளியேற நேர்ந்தாலும், அவர் பயிற்சியாளராகப் பணியாற்றலாம். தகுதியில்லாத தவறினால் (Disqualifying Foul) ஆட்டத்தில் இருந்து வெளியேற்றப்படும் நேரத்திலும், பலத்த காயத்தினால் பயிற்சி யாளராகப் பணியாற்ற முடியாத நேரத்திலும், குழுத் தலைவனாக மாற்றப்படும் மற்றொருவர் பயிற்சியாளராகவும் பணியாற்றுவார்.

5. ஆடுகளத்தைவிட்டு வெளியேறும் ஆட்டக்காரர்

பருவத்தின் (period) இறுதி நேரத்திலும், மற்றும் விதிகள் அனுமதிக்கும் நேரத்தைத் தவிர, ஆட்ட அதிகாரிகளின் அனுமதியின்றி, ஒரு ஆட்டக்காரர் ஆடுகளத்தை விட்டு வெளியே செல்லக் கூடாது. அது விதிகளுக்கு எதிராக, ஆதாயம் தேடுவதாக அமையும்.

6. ஆட்டக்காரரின் எண்கள் (Numbers)

ஒவ்வொரு ஆட்டக்காரரும் தனது பனியனுக்கு முன்னும் பின்னும் கொண்டிருக்கும் எண்கள், தெளிவான வண்ணமுள்ள தாகவும், அணிந்திருக்கும் பனியனின் வண்ணத்திற்கு மாறுபட்ட தாகவும், 2 சென்டிமீட்டர் அகலத்திற்குக் குறையாததாகவும் இருக்க வேண்டும். முதுகுப்புறம் உள்ள எண்ணின் உயரம் குறைந்தது 20 சென்டி மீட்டர் உயரமும், முன்புறம் உள்ள எண்ணின் உயரம் 10 சென்டிமீட்டர் உயரமும் இருக்கவேண்டும்.4லிருந்து 15 வரையுள்ள எண்களை, குழுக்கள் பயன்படுத்தலாம். ஒரே குழுவில் உள்ள ஆட்டக்காரர்கள் ஒருவருக்குரித்தான எண்களைப்போல் (நகல்)அதே எண்ணை அணிந்து கொள்ளக்கூடாது.