பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 65

3. வெற்றி எண் பெறும் முறைகளும் ஆட்ட நேர விதிகளும்

1. வெற்றி எண் பெறுதல் (Goal)

ஆடும் நேரத்தில் ஆட்டக்காரர்கள் தூக்கி எறிந்து மேலேயிருந்து வருகிற பந்து, வளையத்தினுள் விழுந்து வலையினுள் (சிறிது நேரம்) தங்கி, அதன் வழியாகக் கீழே வரும் பொழுதுதான், வெற்றி எண்ணைப் (Goal) பெற முடியும்.

2. Glsusps) storsosler logolju (Value of a Goal)

விளையாடும் நேரத்தில் வளையத்தின் உள்ளே பந்து விழுந்தால் (கள வெற்றி எண்) 2 வெற்றி எண்களும்; தனி எறிமூலம் வளையத்தின் உள்ளே விழுகிற பந்துக்கு 1 வெற்றி எண்ணும் கிடைக்கும். கள வெற்றி எண் (Field Goal) என்பது, எதிராளிக்குரிய வளையத்தினுள், தாக்கும் குழுவினர் (Attacking team) ஆடும் நேரத்தில் பந்தை எறிந்து வெற்றி பெறுவதுதான்.

ஆடும் நேரத்தில், ஆட்டக்காரர்கள் தூக்கி எறிகின்ற பந்து வளையத்திற்கு மேலேயிருந்து உள்ளே நுழைய வந்து கொண்டிருக்கும் பொழுது, அது வழங்கப்படுவதாக (Passing) இருந்தாலும் சரி, வெற்றி எண் பெறுவதற்கான முயற்சியாயினும் சரி, தடுக்கப்பட்ட பரப்பில் உள்ள தாக்கும் குழுவைச் சேர்ந்த ஒருவர் அந்தப் பந்தைத் தொடக் கூடாது.

இந்த விதியானது, வளையத்தையோ அல்லது பின் பலகை யையோ பந்தானது, தொடும் வரைதான் கட்டுப்படுத்தும், இந்த விதியை மீறினால் அதற்கு வெற்றி எண் கிடையாது. தடுத் தாடியவரின் எதிர்க் குழுவினர், தவறு நடந்த இடத்திற்கருகே உள்ள எல்லைக்கு வெளியேயிருந்து உள்ளெறியும் வாய்ப்பைப் பெறுவர்.

தடுக்கும் குழு ஆட்டக்காரர், வெற்றி எண் பெறுவதற்கான முயற்சியால், எதிராளி ஒருவர் எறிந்த பந்து வளையத்திற்கு மேலேயிருந்து உள்ளே நுழையும் தருணத்தில், அந்தப் பந்தைத் தொடவே கூடாது. அந்த விதியும், பந்தானது வளையத்தையோ அல்லது பின் பலகையையோ தொடும் வரைதான் கட்டுப்படுத்தும்.

பந்து வளையத்திற்கு மேலே இருக்கும்போது தடுத்தாடும் குழுவினர் பந்தையோ, வளையத்தையோ (கூடை) அல்லது பின் பலகையையோ தொடக் கூடாது.