பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 விளையாட்டுக்களின் விதிகள் *Eo

அவ்வாறு மீறி தொட்டால், பந்து நிலைப் பந்தாக மாறி விடுகிறது. அது தனி எறியாக இருந்தால், எறிந்தவருக்கு ஒரு வெற்றி எண் கிடைக்கும். ஆடும் நேரமாக அது இருந்தால், அது கள வெற்றி எண்ணாகி 2 வெற்றி எண்கள் தரப்படும். 6.25 மீட்டர் தூரமுள்ள அதை வட்டப் பரப்பிற்கு வெளியிலிருந்து வளையத்திற்குள் எறிந்து விழும் பந்துக்கு, 3 வெற்றி எண்கள் கிடைக்கும். வெற்றி எண் பெற்றதற்குப் பிறகு நிகழ்வது போல, கடைக் கோட்டிற்கு வெளியேயிருந்து உள்ளெறிதல் நிகழ ஆட்டம் தொடங்கும். அதற்குப் பிறகு விதி மீறல் எதுவும் இராது.

பந்தை ஆடி எறியும் நேரத்தில், ஒரு ஆட்டக்காரர் தற்செயலாக (Accidentally) தன்னுடைய சொந்த வளையத்தினுள் பந்தை எறிந்தால், அந்த முயற்சி வெற்றி பெற்றால், அந்தப் பந்தை எதிரணித் தலைவன் எறிந்து வெற்றிபெற்றதாக அவர்கணக்கில் குறிக்கப்படும். ஒரு அணி வேண்டுமென்றே தமது வளையத்திற்குள் பந்தை எறிந்து விழச் செய்தால், அதற்கு வெற்றி எண் கிடையாது. ஆனால், அந்த அணியின் பயிற்சியாளருக்கு, தனிநிலைத் தவறு தண்டனை தரப்படும். 3. floodius;5. (Dead Ball)

வெற்றி எண் பெறுகிற பொழுது பந்து நிலைப் பந்தாக (Dead ball) மாறுகிறது. இன்னும் அது, பல முறைகளில் நிலைப்பந்தாக மாறும் வாய்ப்புள்ளது.

(அ) தனிநிலைத் தவறினால் (Technicalfoul) அல்லது தனியார் தவறினால் (Personal foul) பெறுகிற தனி எறிமூலம், வளையத்தினுள் பந்து செல்லவில்லை என்று தெளிவாகும் பொழுதும், அல்லது ஒரு தனி எறிக்கும் அதற்குப் பிறகு தொடர்ந்து வரும் மற்றொரு தனி எறிக்கும் இடையிலும்;

(ஆ) பிடிநிலை பந்து (Held Ball) ஏற்படும் பொழுதும், அல்லது வளையத்தைத் தாங்கியுள்ள பகுதியில் பந்து தேங்கி தங்கிவிடுகிற பொழுதும் (Lodge);

(இ) விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது ஆட்ட அதிகாரிகளின் விசில் ஒலிக்கும் பொழுதும்;

(ஈ) 24 வினாடி கண்காணிப்பாளர் பந்து ஆட்டத்தில் இருக்கும் பொழுதே, சைகை ஒலி கொடுத்தாலும்,

(உ) பருவ நேரம் அல்லது மிகை நேர பகுதியின் கால அளவு முடிவடைகிற பொழுதும்;

(ஊ) விளையாடும் நேரத்தில் தவறு நேர்கிற பொழுதும்;