பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை

தமிழால் முடியாதது எதுவுமில்லையென அரிதின் முயன்று, விளையாட்டுகளின் விதிகள், விளையாட்டு நுணுக்கங்கள், விளையாட்டுக்களின் வரலாறு, விளையாட்டுத் துறையில் கலைச் சொற்கள், விளையாட்டுத் துறைக்கென அகராதி என பல்வேறு தலைப்புகளில் நூல்களை எழுதி, வெளியிட்டு, விற்பனை யாளராகவும் உலாவந்துதமிழுக்குத் தொண்டாற்றியவர் பேராசிரியர் எஸ்.நவராஜ் செல்லையாஅவர்கள்.

அழகப்பாகலைக் கல்லூரி, சென்னை, ஒய்.எம்.சி. உடற்கல்வி கல்லூரி முதலிய புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவமும், தானே ஒரு விளையாட்டு வீரராக விளையாடி பெற்ற பேரின்ப விளைவுகளும்தான்.இவரைநூற்றுக்கணக்கானநூல்களை எழுதத்துாண்டின என்றால் அது மிகையல்ல.

தினமணி முதலிய பல்வேறு பத்திரிகை வாயிலாக, வானொலி, தொலைக்காட்சி வாயிலாக விளையாட்டு, உடல் நலம், மன பலம் சார்ந்த கட்டுரைகளை, சொல்லோவியங்களை அழகுத் தமிழில் தந்ததோடு, விளையாட்டுக் களஞ்சியம் என்ற மாத இதழையும் இலக்கிய உணர்வோடு இருபத்தைந்து ஆண்டுகள் தடையின்றி நடத்திக் காட்டிய வெற்றி நாயகன். -

தெய்வப்புலவர் வள்ளுவரின்குறளுக்கு புதிய உரையை எழுதி, திருக்குறள் ஓர் உடலியல் நூல் என்பதாகப் படம்பிடித்துக் காட்டி யுள்ளார்.

தமிழால் எல்லாம் முடியும் என்ற நம்பிக்கையில் விளையாட்டுக் களின் விதிகளை மட்டுமல்ல, விளையாட்டுத்துறை சார்ந்த பல இலக்கியங்களையும் படைத்து விளையாட்டுத்துறை தமிழ் இலக்கிய வளர்ச்சியில் 1964ஆம் ஆண்டு முதல் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு 2001 வரை இப்பூவுலகில் வாழ்ந்த தமிழ்த் தொண்டர்.

டாக்டர்நவராஜ் செல்லையாஅவர்களின் விளையாட்டுக்களின் விதிகள் மறுபடியும் உங்கள் கரங்களில் தவழ டாக்டர் என்.சி.ஜீசஸ் ராஜ்குமார் எங்களுக்குத் துணைபுரிந்துள்ளார். அவருக்கு எங்கள் நன்றி!

பதிப்பாளர்.