பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 விளையாட்டுக்களின் விதிகள் -E

(ஈ) பிடிநிலைப் பந்துக்குப் பிறகு பந்தை ஆட்டத்திலிட காலதாமதம் செய்யும் பொழுது

(உ) வேறு எந்தக் காரணம் பற்றியாவது, ஆட்ட அதிகாரிகளால் ஆட்டம் நிறுத்தி வைக்கப்படும் பொழுது.

(ஊ) 24 விநாடிக்குரிய சைகை ஒலி ஒலித்தவுடன். 11. ஓய்வு நேரத்திற்கான வேண்டுகோள் (Charged Time)

ஒரு குழுப் பயிற்சியாளர்க்கு ஓய்வு நேரம் (Time out) வேண்டு மென்று கேட்க உரிமையுண்டு. அவருக்கு ஓய்வு நேரம் தேவைப்படும் பொழுது, தானே குறிப்பாளரிடம் சென்று, அதற்கேற்ற சரியான நியதியுள்ள சைகையின்படி, தெளிவான முறையில் ஓய்வு நேரம் வேண்டுமென்று கேட்க வேண்டும். தாங்கள் இருந்த இடத்தைவிட்டு அகலாமலே ஓய்வு நேரம் கேட்க, மின் பொறி மூலம் குறிக்காட்டலாம். இத்தகையக் குறிகளை (Signs), வேறு எந்தக் காரணங்களினாலும், ஆட்டக்காரரை மாற்றுவதற்காகப் பயன்படுத்தக் கூடாது.

பந்து நிலைப் பந்தானவுடன், குறிப்பாளர் அவரின் வேண்டு கோளை உடனே நடுவருக்குத் தெரிவிக்க வேண்டும். ஆட்டத்தில் மீண்டும் பந்து இடப்படுவதற்கு முன்பாக இருந்தால், பந்து நிலைப்பந்தாக மாற ஆட்டம் நிறுத்தப்படுகிறது. அந்த நேரத்தில் ஆட்ட மணிப்பொறியும் நிறுத்தப்பட வேண்டும். 12. ous jGifu G|Birth (Time for Time out)

மேற்கூறிய விதிகளின்படி (11) ஒரு குழு 1 நிமிடம் ஓய்வு நேரத்தைப் பெறும். ஓய்வு நேரம் முடிவதற்கு முன் அந்தக் குழு ஆடுவதற்குத் தயாராக இருந்தால், ஆட்டத்தை உடனே தொடங்கி வைக்க அதிகாரிகளும் தயாராக இருந்தால், ஆட்டத்தை உடனே தொடங்கி வைக்க நடுவருக்கு அதிகாரமுண்டு.

விதி விலக்குகள்: காயமுற்ற ஆட்டக்காரர், அல்லது நீக்கப் படுகின்ற ஆட்டக்காரர், ஐந்து தவறிழைத்து வெளியேறும் ஆட்டக்காரர், ஆடுகளத்தை விட்டு ஒரு நிமிடத்திற்குள் வெளியேறி விட்டால் அல்லது காயமடைந்து ஆட்டக்காரர் உடனே ஆடுவதற்குத் தயாராகிவிட்டாலும், அல்லது காலணியின் மேல் கயிறு அவிழ்ந்ததற்காக நடுவர்கள் சிறிது நேரதாமதத்தை அனுமதித்தாலும், அதற்காக ஓய்வு நேரம் தரப்படுவதற்கில்லை. (ஓய்வு நேரப் பகுதியைக் காண்க).