பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

EP டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 7

13. ஓய்வு நேரம் முடிந்ததும் (After Time out)

ஓய்வு நேரம் முடிந்தவுடன், முடிந்துவிட்டதென்பதற்குரிய சைகை நடுவர்களிடமிருந்து வந்த பிறகு, ஆட்டமணிப்பொறி ஓடத் தொடங்குகிறது. நடுவர்களிடமிருந்து இவ்வாறு சைகை வரத் தவறினால், இன்னும் ஓய்வு நேரம் தொடர்கிறது என்று நடுவர் களிடமிருந்து சைகை வராது போனால் - ஆட்ட மணிப்பொறியை ஓடவிட(Start) நேரக் காப்பாளருக்கு (Time-keeper) அதிகாரமுண்டு.

(அ) பந்துக்காகத்தாவும் முறையில் ஆட்டம் தொடங்குமானால், பந்து அதன் உச்சநிலை உயரத்திற்குச் சென்று கீழே இறங்கி வரும் நிலையில் ஒரு ஆட்டக்காரரால் முதலாவதாகத்தட்டப்படும்பொழுது, ஆட்டமணிப் பொறி ஓடத் தொடங்கும்.

(ஆ) தனிஎறி வெற்றி பெறாமல், அதனைத் தொடர்ந்து பந்து (ஆட்டம்) விளையாடப்படுமானால், அந்தத் தனி எறி வெற்றி பெறவில்லை எனத் தெளிவாகத் தெரிந்ததும் ஆட்டமணிப்பொறி ஒடத் தொடங்கும்.

(இ) எல்லைகளுக்கு வெளியே சென்ற பந்து, உள்ளெறிதலின் (Throw-in) மூலம் உள்ளே வந்து, ஆடுகளத்திலுள்ள ஒரு ஆட்டக்காரரைத் தொட்ட உடனேயே, ஆட்டமணிப்பொறி ஓடத் தொடங்கும்.

14. உரிய ஓய்வு நேரம் (Time out)

முதல் மூன்று பருவத்திற்கும் 1 நிமிட இடைவேளை கொடுக்கப்படும். நான்காம் பருவத்திற்கு 2 இடைவேளைகள்

அனுமதியுண்டு. (1+1+1+2)

பயன்படுத்தப்படாத ஓய்வு நேரங்களை, அடுத்தப் பருவத்திலோ அல்லது மிகை நேரப் பருவத்திலோ சேர்த்துக் கேட்கக் கூடாது.

ஓய்வு நேரத்தின்போது, ஆட்டக்காரர்கள் ஆடுகளத்திற்கு வெளியே செல்லவும், அணியினர் அமரும் பெஞ்சில் போய் உட்காரவும் அனுமதிக்கப்படுவார்கள். 15. ஓய்வு நேரத்திற்குப் பின் ஆட்டத்தின் தொடக்கம்

(அ) ஓய்வு நேத்திற்குப் பிறகு அல்லது ஏதோ ஒரு காரணத்தால் பந்து நிலைப் பந்தாக மாறிவிட்ட பிறகு, 13-ம் விதியில் காணும் ஆ இ என்ற பிரிவுகளில் கூறியுள்ளபடி, எந்த நிலையும் ஏற்படா

திருந்தால், கீழே காணும் முறைகளில் பந்தை ஆட்டத்திலிட ஆட்டம் தொடங்கும்.