பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

GP டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 73

17.3 வினாடிகளுக்கு மேல் இருத்தல்

(Three Second’s Rule)

தன்னுடைய குழுவினர் கையில் பந்து இருக்கும்போது, மையக் கோட்டிற்கும், முன்னேயுள்ள தனிஎறிக் கோட்டின் விளிம்புக்கும் இடையிலுள்ள எதிராளிகளின் தடுக்கப்பட்ட பரப்பில் (Restricted Area) 3 வினாடிகளுக்கு மேல் ஒருவர் இருந்தால், அது விதியை மீறயதாகும். எல்லைக்கு வெளியேயிருந்து பந்தை உள்ளெறியும் எல்லா சமயங்களிலும் இது பின்பற்றப்படுகிறது. எல்லைக்கு வெளியே வந்து ஒரு ஆட்டக்காரர் தன்வசம் பந்தைப் பெற்று, அதை உள்ளெறியும் நேரத்திலேயிருந்து அந்த எண்ணிக்கை (3 வினாடி) கணக்கிடப்படுகிறது.

ஒரே குழுவில் உள்ள ஆட்டக்காரர்கள், பந்தை பிடித்தோ அல்லது பந்துடன் ஒடிக் கொண்டோ அல்லது ஒருவருக்கொருவர் பந்தைக் கைமாற்றிக்கொண்டோஇருப்பதைத்தான் ஒரு குழுவினரின் கட்டுக்குள் பந்து இருக்கிறது என்று கூறப்படுகிறது. தடுக்கப்பட்டப் பரப்பைச் சேர்ந்த கோடுகளும் அந்தப் பரப்பைச் சேர்ந்ததே. அந்தக் கோடுகளில் ஒன்றைத் தொடுகின்ற ஆட்டக்காரர், விதியை மீறியவர் ஆவார்.

வளையத்திற்குள் எறியும் முயற்சியில் பந்து மேலே (Air) இருக்கும்பொழுதும், அது பின் பலகையில் பட்டு எதிர்நோக்கி வரும்பொழுதும், அல்லது பந்துநிலைப்பந்தாக இருக்கும்பொழுதும், 3 வினாடித் தடைவிதி பின்பற்றப்படமாட்டாது. ஏனெனில், இதுபோன்ற நிலைகளில் எந்தக் குழுவின் கட்டுக்குள்ளும் பந்து இல்லாமல் இருப்பதேயாகும்.

எதிராளியின் தடுக்கப்பட்ட எல்லைக்குள்ளேயிருக்கும் ஒரு ஆட்டக்காரருக்கு, குறைந்தது 3 வினாடிகள் பந்துடன் ஓடிக்கொண்டு வளையத்தினுள் பந்தை எறிகிற உரிமை வழங்கப் பட்டிருக்கிறது.

தண்டனை மேலேயுள்ள 6-வது விதியைக் காண்க.

18.5 solormiq sil (Five-Seconds Rule)

எதிராட்டக்காரர்களால் முற்றிலும் சுற்றி சூழப்பட்ட நிலையில், பந்து வைத்திருக்கும் ஒரு ஆட்டக்காரர், 5 வினாடிகளுக்குள் அந்தப் பந்தை எறிந்தோ, வழங்கியோ, உருட்டியோ, அல்லது பந்துடன் ஒடியோ, எதுவும் செய்யாமல் தானே வைத்திருந்தால், அதனை பிடிநிலைப் பந்து என்று நடுவர் கூறுவார். அது ஒரு விதி மீறலாகும்.