பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

EP டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 75

28 விநாடி நேரத்திற்குள்ளாக எல்லைக்கப்பால் பந்து சென்று, பிறகு மீண்டும் அந்த குழுவின் வசம் பந்து வந்த சேர்ந்தால், அப்பொழுதிருந்து புதிய 28 விநாடிப் பகுதி தொடங்குகிறது. ஒரு குழு தன்வசம் பந்தை வைத்திருக்கும் பொழுது, எதிராளிகள் சும்மா பந்தைத் தொடுவதால் மட்டும் புதிய 28 விநாடிப் பகுதி தொடங்குவதாகக் கொள்ளக் கூடாது. ஆட்ட நேரத்தில் ஒரு ஆட்டக்காரர், பந்தைப் பிடித்து கொண்டிருக்கிற பொழுதும், பந்தைத் தன் வசம் வைத்திருக்கிறார் என்றே பொருள். தன்வசம் வைத்திருக்கும் பொழுதும், தனது பாங்கருக்கு பந்தை மாற்றிக் கொள்ளும் பொழுதும் கூட, ஒரு குழுவின் கட்டுக்குள் பந்து இருக்கிறது என்றே கூற வேண்டும். வளையத்தினுள் பந்தை எறிய முயலுகிற வரைக்கும் அல்லது எதிராளி பந்தைத் தன்வசமாக்கிக் கொள்கிற வரைக்கும், அல்லது பந்து நிலைப்பந்தாக மாறுகிற வரைக்கும் அப்பந்தை ஒரு குழு தன் வசமாக்கியுள்ளது என்பது தொடர்கிறது.

எதிராளி மேலே வேண்டுமென்றே பந்தை எறிந்து அல்லது தட்டிவிட்டு, அதனால் எல்லைக்கு வெளியே பந்தை ஒரு ஆட்டக்காரர் போகவிட்டால், அதற்குத் தண்டனையாக எதிராளி களுக்கு உள்ளெறியும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஏனெனில், விதியை மீறி ஒரு புதிய 28 விநாடிப் பகுதியைப் பெறுவதற்காக, சில குழுக்கள் இதுபோன்ற தகாத முறையைக் கையாளுவதைத் தடுப்பதற்காகவே இவ்விதியமைக்கப்பட்டது. ஆடுதற்குரிய நேரத்தின் இறுதி வரைக்கும் எல்லா சூழ்நிலைகளிலும் இவ்விதி பயன்படும்.

தண்டனை: மேலேயுள்ள 6-வது விதியைக் காண்க.

4. விளையாடும் முறைகள் (Playing Regulations)

1. விளையாட்டைத் தொடங்க

எதிரெதிர்க் குழுவைச் சேர்ந்த இரு ஆட்டக்காரர்கள் மைய வட்டத்தினுள் நின்று கொண்டிருக்க, அவர்களுக்கு மேலாக பந்தை உயர்த்தி எறிந்து (Toss) நடுவர் ஆட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். (இந்த மையத் தாண்டலைப் பற்றிக் கீழே காண்க.)

வெளியூர் அணி (Visiting Team) முதல் பருவத்தில் தமக்குரிய வளையத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். பொதுவாக ஆடுகளங்களில் நாணயத்தைச் சுண்டி விடுவதன்