பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 விளையாட்டுக்களின் விதிகள் *E,

மூலமே வளையங்கள் தீர்மானிக்கப்படும். இரண்டாவது பகுதியில் குழுக்கள் தங்களுடைய பகுதிகளை (வளையங்களுக்காக) மாற்றிக் கொள்ளும்.

ஒரு குழுவில் 5 ஆட்டக்காரர்கள் இல்லாமல் இருந்தால், ஆட்டத்தைத் தொடங்க முடியாது.

குறித்த ஆட்ட நேரத்திற்கு 15 நிமிடம் கழித்தும் வராத ஒரு குழுவின் எதிர்க்குழு, வெற்றியடைந்ததாகக் கொள்ளப்படும்.

2. பந்துக்காகத் தாவும் பொழுது ஆட்டக்காரர்களின்

@Llsis (Position of the Players)

இரண்டு எதிர்க்குழு ஆட்டக்காரர்களுக்கு இடையில், நடுவர் பந்தைத் தூக்கி உயரே எறியும் பொழுது (Toss), பந்துக்காகத் தாவல் இடம் பெறுகிறது.

இரண்டாகப் பிரிக்கப்பட்டிருக்கும் மைய வட்டத்தினுள்ளே எதிர்க் குழுவைச் சேர்ந்த இருவர், தங்களுடைய வளையத்தின் அருகாமையில் இருக்கும்படி தம்மை நிறுத்தி, வட்டத்தின் மையத்தை நோக்கியபடி ஒரு காலை வைத்து, அவர்களுக்கிடையே மையக் கோடிருப்பது போல் நிற்பார்கள்.

செங்குத்தாக உயரே செல்லும்படியும் தாண்டுபவர்களுக்குப் பக்கவாட்டில் இருக்கும் படியும் நடுவரால் எறியப்படும் பந்தின் உயரமானது, அவர்கள் தாண்டினாலும் எட்டாத உயரத்தில் சென்று இறங்கி அவர்களுக்கிடையில் வந்து விழுமாறு, நடுவர் பந்தை தூக்கி எறிவார். உச்ச நிலைக்குச் சென்று இறங்கும் பந்தானது ஒருவரால் அல்லது இருவராலும் தட்டப்பட வேண்டும். யாராலும் தட்டப்படாமல் பந்து கீழே விழுந்துவிட்டால், மீண்டும் அதே இடத்தில் அதே முறையில், பந்தைத் தூக்கி நடுவர் எறிய, ஆட்டம் தொடங்கும்.

உச்ச உயரத்திற்குப் பந்து செல்லும் முன், குதிப்பவரில் எவரேனும் ஒருவர் பந்தைத் தட்டவோ அல்லது பந்தைத் தொடும்வரையோ தங்களது இடத்தை விட்டு (வட்டத்திற்கு வெளியே) செல்வதோ கூடாது.

இருமுறை மட்டுமே தொட்டாடிய குதிப்பவர்களில் ஒரு ஆட்டக்காரர், மற்ற 8 ஆட்டக்காரர்களையோ அல்லது ஆடுகளத் தரையையோ அல்லது வளையத்தையோ அல்லது பின் பலகையையோ இவற்றில் ஏதாவது ஒன்றைப் பந்து தொடும் வரை, மீண்டும் தானே பந்தை ஆடக்கூடாது.