பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

EP டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 79

7. 2 flu QLib (Position)

ஒரு ஆட்டக்காரருக்குரிய இடம் என்பது அவர் நின்று கொண்டிருக்கும் இடத்தைக் கொண்டு, கீழே தரப்பட்டுள்ள விதிகளின் மூலம் நிர்ணயிக்கப்படும். (மேலேயுள்ள5-ஆவது பிரிவு எல்லைகளுக்கு வெளியே என்ற பகுதியில், 1, 3, 4-ஆவது பிரிவு விதிமீறலும் தண்டனையும் என்ற 7-ஆம் பகுதியில் 2, 3, 4, 6, 8, 15-ஆவது பிரிவுகள்) எல்லைக் கோட்டையும், தனி எறிக் கோட்டையும் அல்லது தனி.எறி எல்லையைக் குறிக்கின்ற பரப்பையும், பொறுத்தவரை, ஒரு ஆட்டக்காரர் தாண்டிக் குதித்து எழும்பிப் பின் அதே நிலைக்குத் திரும்பி வந்து கடைசியாக எந்த இடத்தை அடைந்தாரோ, அந்த இடமே அவருக்குரிய இடம் என்று நிர்ணயிக்கப்படும்.

ஆட்டக்காரரின் இடத்தை நிர்ணயிப்பது போலவே ஒரு நடுவரின் இடமும் நிர்ணயிக்கப்படும். நடுவரின் மேல் பந்து பட்டாலும் அவர் நின்று கொண்டிருந்த இடத்தில் வந்து பந்து

பட்டதாகவே கருதப்படும்.

8. கடைக்கோட்டிலிருந்து பந்தை விளையாட, உள்ளே

(இடுதல்) எறிதல்

எதிராளி ஒருவர்கள வெற்றி (Field Goal) எண், பெற்ற பிறகு, மறு குழுவைச் சேர்ந்த ஒருவர் கடைக்கோட்டிற்குப் பின்புறம் எந்த இடத்திலிருந்தாவது நின்று பந்தை ஆடுவதற்காக உள்ளெறிய வேண்டும். பந்து விழுந்த வளையத்திற்குப் பின்புறமுள்ள கடைக்காட்டிற்குப் பின்னால், எவ்வளவு தூரத்தில் நின்றிருந்தாலும் சரி, அவர் பந்தை எறியலாம். அல்லது கடைக்கோட்டில் முன்னால் நிற்கும் தன் பாங்கருக்குப் பந்தை வழங்கலாம். ஆனால், அவர் பந்தை உள்ளெறிவதற்காக 5 விநாடிகளுக்குமேல் எடுத்துக் கொள்ளக் கூடாது. கோட்டுக்கு வெளியே நிற்கும் ஒரு ஆட்டக்காரரின் கைகளுக்குப் பந்து வந்து சேர்ந்த உடனேயே, விநாடிகளைக் கணக்கிடுதல் ஆரம்பமாகும்.

பொதுவாகவே, நடுவர் பந்தைத் தொடக் கூடாது. விளையாட்டில் பந்தை உடனே இடவேண்டும் என்பதற்காக அவர் அவ்வாறு செய்யலாம். உள்ளெறியும் ஆட்டக்காரரின் கையிலுள்ள பந்தை, மற்ற எதிர்க்குழு ஆட்டக்காரர்கள் தொடக்கூடாது. எதிர்பாராத விதமாகவோ அல்லது இயற்கையால் எழும் ஆர்வ உணர்ச்சி காரணமாக பந்தைத் தொட ஒருவருக்கு அனுமதியுண்டு. ஆனால்