பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o

GP டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 83

ஒருவர் தனிஎறி எடுக்கும் பொழுது, மற்றவர்கள் கீழ்க்கண்ட இடங்களில் நிற்கலாம்.

(அ) வளையத்திற்குக் கீழேயுள்ள (குறிக்கப்பட்டுள்ள) இரண்டு இடங்களில் எறிபவரின் எதிர்க்குழுவைச் சேர்ந்த இரண்டு ஆட்டக்காரர்கள்.

(ஆ) மற்ற ஆட்டக்காரர்கள் ஒருவர் மாறி ஒருவராக (Alternate) நிற்கலாம்.

(இ) எறிபவரின் வழியில் நிற்காமல் அல்லது தொந்தரவு தராமல் அல்லது கடைக்கோட்டிற்கு அடுத்தடுத்த தனி.எறி எல்லைக் கோட்டின் மேல் நிற்காமல், வளையத்தைப் பந்து தொடும்வரை அவரவர் இடங்களில் அசையாமல், மற்ற எல்லா ஆட்டக்காரர்களும் விரும்பிய இடத்தில் நிற்கலாம். 5. தனிஎறி வெற்றி பெற்றால்

தனி.எறிக்கு பின் வெளியேயிருந்து பந்தை ஆட்டத்திலிட:

(அ) தனி எறி வெற்றி பெற்றால், பந்தை எறிந்தவரின் எதிராளிகளில் எவரேனும் ஒருவர் கடைக்கோட்டிற்குப் போய், அதன் பின்னிருந்து பந்தை உள்ளெறிய வேண்டும்.

(ஆ) பயிற்சியாளர் அல்லது மாற்றாள் இழைத்தத் தனிநிலைத் தவறுக்காகப் பெற்ற தனி எறியில் வெற்றி பெற்றாலும் பெறா விட்டாலும், எறிந்தவரின் குழுவைச் சேர்ந்த ஒருவர், எல்லைக்கு வெளியேயுள்ள ஆடுகள நடுப்பாகத்திலிருந்து பந்தை உள்ளெறிய ஆட்டம் தொடங்கும்.

இடைவேளை நேரத்தில் அல்லது மிகை நேரப் பகுதியில் தனிநிலைத் தவறு கூறப்பட்டு, தனிஎறி அல்லது எறிகள் அதற்காக எடுக்கப்பட்டால், மறுபடியும் ஆட்டம் பந்துக்காகத் தாவலின் மூலம் தொடங்கப்படும்.

6. தனி எறி தோற்றால்

தனி எறியில், எறிபவர் வெற்றி பெறாவிட்டால், அதிலிருந்து ஆட்டம் தொடர்ந்து ஆடப்படும். அதேபோன்ற தனிஎறி, பலமுறை எறியப்பட வேண்டும் என்ற கட்டளையிருந்தால், கடைசியாக எறியப்படும் தனிஎறி வெற்றி பெறாத பொழுது, அதிலிருந்தே ஆட்டம் தொடர்ச்சி பெறும், வளையத்திலும் பின் பலகையிலும் படாமல் எல்லைக்கு வெளியே பந்து சென்றால், எதிர்க்குழுவினர் பக்கக் கோட்டிலிருந்து பந்தை உள்ளெறிய ஆட்டம் தொடங்கும்.