பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

4

விளையாட்டுக்களின் விதிகள்

வளையத்தினுள் விழத் தவறிய பந்து, எல்லைக்குள்ளேயே கிடந்தும், எந்த ஆட்டக்காரரும் அப்பந்தைத் தொட்டு ஆடாமல் இருக்கும்பொழுது, தனி.எறிக் கோட்டுக்கு எதிரேயுள்ள பக்கக் கோட்டின் வெளியேயிருந்து எதிர் குழுவினர் பந்தை உள்ளெறிய, ஆட்டம் தொடங்கும். பயிற்சியாளர் அல்லது மாற்றாள் இழைத்ததால் ஏற்படும் தனிநிலைத் தவறைத் தொடர்ந்து வருகிற தனி எறிக்கு, தனிநிலைத் தவறு என்ற பகுதியில் 3-வது பிரிவைக் காண்க.

7. விதிமீறலும் தண்டனையும் (Violations and Penalties) 1. விதியை மீறல் என்பது

விதியின் (Rule) வழியில் சிறிது பிறழ்ந்து நடப்பதாகும். ஆனால் அது தவறலல. 2. தனி எறிக்குள் விதியை மீறல்

தனி எறியாளருக்கு (FreeThrower) கையில் பந்துகிடைத்தபிறகு, எந்த ஆட்டக்காரரும் தனிஎறிக்குள்ள விதிமுறைகளை மீறக்கூடாது.

(அ) ஒரு ஆட்டக்காரர் தொடுவதற்குமுன், வளையத்திற்குள் விழுமாறு அல்லது வளையத்தைத் தொடுமாறு 5 விநாடிக்குள் தனி எறியாளர் பந்தை எறிய வேண்டும்.

(ஆ) வளையத்திற்கு மேலேயோ அல்லது உள்ளேயோ இருக்கும்பொழுது, அவரோ அல்லது பாங்கரோ அந்தப் பந்தையோ அல்லது வளையத்தையோ தொடக் கூடாது.

(இ) தனிஎறிக் கோட்டை அல்லது அக்கோட்டைக் கடந்து மறுபுறமுள்ளத் தரையை, அவர் தொடவே கூடாது. தனி எறிப் பரப்பைத் தொடுவது அல்லது பந்தைத் தொடுவது அல்லது எறிபவருக்கு மன உலைவு தரும்படியாக நடந்து கொள்வது போன்ற நிலையில் மற்ற ஆட்டக்காரர்கள் நடந்து கொள்ளக் கூடாது. பந்து வளையத்தை அல்லது பின்பலகையைத் தொடும் வரை அல்லது இரண்டில் ஏதாவது ஒன்றைத் தொடவில்லை என்று தெளிவாகத் தெரியும் வரை, இந்தத் தடைவிதி பயன்படுத்தப்படுகிறது. தண்டனை

1. (அ) தனி.எறியாளர் விதியை மீறினால், வெற்றி எண் கணக்கில் சேராது. விதிமீறல் நிகழும் பொழுது பந்து நிலைப் பந்தாகிவிடும்.

தனியார் தவறினால் வரும் தனி எறியாக இருந்தால், எறிந்தவர்களின் எதிர்குழுவினர் தனி எறிக் கோட்டுக்கு எதிராக உள்ள