பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

GP டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 89

அக்கறையுடன் முயலும்போது அருகிலிருந்து பந்தைத் தட்டிவிட்டு அதைத் தன் வசமாக்கி கொள்ள முயலுதல் அல்லது அடுத்தவர் தனது கட்டுக்குள் வைத்திருக்கும் பந்தைத் தடுத்துத் தன் வசமாக்கிக் கொள்ளுதல் முதலியன பந்துடன் ஒடல் அல்ல எனக் கொள்க. 7. இரண்டாவது முறை பந்துடன் ஒடல்

ஒருமுறை பந்துடன் ஒடி முடிந்த பிறகு, பந்து அவரின் கட்டுக்குள் இல்லாமலிருந்தால் அல்லது மற்ற ஆட்டக்காரரைப்பந்து தொட்டிருந்தால் அல்லது எதிராளிக்குரிய வளையத்தின் மீதோ அல்லது பின் பலகையின் மீதோ பந்து பட்டிருந்தால், அல்லது அவரது கட்டுக்குள் (Control) இல்லாத பந்தை எதிராளி ஒருவர் தொட்டிருந்தால் அவர் இரண்டாவது முறையாகப் பந்துடன் ஒடலாம்.

தண்டனை: 5-வது பிரிவைக் காண்க. 8. பந்துக்காகத் தாவலில் உள்ளக் கட்டுப்பாடுகள்

பந்து தட்டப்படுவதற்கு முன்பு தனது குதிக்கும் இடத்தை விட்டுக் குதிப்பவர்நீங்குவதும், அல்லது குதிக்காத ஒரு ஆட்டக்காரர் வட்டத்திற்குள் நுழைவதும் போன்ற செயல்கள் எல்லாம் விதியை மீறுவனவாகும். அப்பொழுது எதிராகக் குதிக்க இருப்பவருக்கு (Opposing Jumper) வளையத்தினுள் பந்தைத் தட்டிவிடவாய்ப்பை தருவதற்காகவும் அல்லது அவரது பாங்கருக்குப் பந்து முதலில் கிடைக்குமாறு தட்டிவிடுவதற்கான வாய்ப்பைத் தருவதற்காகவும் நடுவர் தனது விசிலை சிறிது நேரம் நிறுத்தி வைக்க வேண்டும். இதில் ஏதாவது ஒன்று நிகழ்ந்திருந்தால், விதிமீறல், அல்லது பந்தை உயர்த்தி எறிவதை நடுவர் சரியாகச் செய்யாமலிருந்தால், மீண்டும் ஒருமுறை பந்து உயர்த்தி எறியப்படும் (Toss).

தண்டனை: மேலேயுள்ள 5-வது விதியைக் காண்க.

9. எதிராளியின் வளையத்தைத் தொடுதல்

எதிராளியின் வளையம் என்பது ஒரு குழு அதனுள் பந்தை எறிய முயன்று வெற்றி எண் பெறக்கூடிய வாய்ப்பை அளிப்பதாகும். ஆடும் நேரத்தில் வளையத்திற்குள் எதிராளியால் எறியப்படுகின்ற பந்து வளையத்தின் மேலே இருக்கும்பொழுது, எதிராளிக்குரிய வளையத்தை அதாவது தாங்கள் காத்திருக்கும் வளையத்தை ஒரு குழு தொடக் கூடாது. -

தண்டனை: மேலேயுள்ள 5-வது விதியைக் காண்க.

- தனக்குரிய வளையத்திற்கு மேலே வரும் பந்தைத் தொடுதல் அல்லது பின் பலகையின் மேல் விழும் அல்லது வளையத்தினுள்