பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 விளையாட்டுக்களின் விதிகள் >

செல்லப் போகும் பந்தைத் தொடுதல் அல்லது பந்தைத் தொடும் பொழுதே கையோ அல்லது முன்கையோ வளையத்தைத் தொடுதல் அல்லது வளையத்திற்கு மேலே சரி நேராகப் பந்தைத் தொடுதல். (வளையத்திற்கு மேலே உள்ள இடத்தில் வளையத்தின் அளவுபோல் கற்பனை வட்டம் ஒன்று மேலே இட்டுக் கொள்ள வேண்டும்.)

தண்டனை விதி மீறல் நடக்கும் பொழுது, பந்து நிலைப் பந்தாகிறது. தனி எறி எறியும் பொழுது, இது நடந்தால், எறிபவருக்கு வெற்றி எண் கிடைக்கும். விளையாடும் நேரத்தில் இது நடந்தால் எறிபவருக்கு 2 வெற்றி எண் கிடைக்கும். அவ்வாறு எறிந்து வெற்றி பெற்றால், கடைக்கோட்டுக்கு வெளியேயிருந்து பந்தை உள்ளெறியும் வாய்ப்புக் கொடுக்கப்பட விதி மீறல் புறக்கணிக்கப்படுகிறது.

10. தடுக்கும் ஆட்டக்காரர் பந்தைத் தடை செய்தல்

ஆடும் நேரத்தில் களவெற்றி எண்ணுக்காக எதிராளி வளையத்திற்குள் பந்தை எறிய முயன்றபோது, வளையத்திற்கு சரியாக மேலே வந்து பந்து உள்ளே நுழையும் நேரத்தில், (Downward fight) அதைத் தொடுவது கூடாது.

பந்தை எறிவதற்கும் (அடித்தற்கல்ல), அவ்வாறு எறியப்படும் பந்து வளையத்தையோ அல்லது பின் பலகையையோ அல்லது அவை இரண்டையும் பந்து தொடவில்லை என்பது தெளிவாகத் தெரியும் வரை இந்த விதி பயன்படுகிறது.

தண்டனை: மேலேயுள்ள 5-வது விதியைக் காண்க. 11. தாக்கும் ஆட்டக்காரர் பந்தைத் தடை செய்தல்

தாக்கும் குழுவைச் சேர்ந்த ஒரு ஆட்டக்காரர், தடுக்கப்பட்டப் பரப்பில் நின்று கொண்டு ஆடும் நேரத்தில் வளையத்திற்குள் பந்தை எறிய முயன்றாலும் சரி, அல்லது பந்தைக் கைமாற்றி அனுப்புவதாக இருந்தாலும் சரி, வளையத்திற்கு சரியாக மேலேயிருந்து வரும் பந்து வளையத்திற்குள் நுழைகிற பொழுதும் சரி, பந்தைத் தொடுவதோ அல்லது பிடிப்பதோ கூடாது.

பந்து வளையத்தை அல்லது பின் பலகையைத் தொடும்வரை, இந்தத் தடை விதி, பயன்படும்.

தண்டனை இதனால் வெற்றி எண்ணைப் பெற முடியாது. விதிமீறல் நிகழ்ந்த இடத்திற்கருகிலுள்ள பக்கக் கோட்டின் வெளியேயிருந்து பந்தை உள்ளெறியும் வாய்ப்பு எதிராளிக்கு கிடைக்கிறது.