பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

GP டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 91

8. 56ug)]56ir (Fouls)

விதிகளை மீறுவதே (Infraction) தவறெனக் கொள்ளப்படும். அதற்குத் தண்டனையாகத் தவறிழைத்தவர்மேல் தவறு (Foul) எனக் குற்றஞ் சாட்டப்படும்.

ஒன்று, தனி நிலைத் தவறு இரண்டாவது தனியார் தவறு என்று தவறு இருவகைப்படும்.

(அ) தனிநிலைத் தவறுகள் (Technical Fouls) ஆட்டத்தில் பங்கு பெறாத அல்லது பங்குபெறும் ஒரு ஆட்டக்காரர் எதிராளியின் மேல் மோதி உடல் தொடர்பு கொள்ளாத பொழுது, ஏற்படுத்தும் தவறே, தனிநிலைத் தவறாகும். 1. ஆட்டக்காரரின் தனிநிலைத் தவறுகள்

நடுவர்களின் எச்சரிக்கையை (அறிவுரை) ஆட்டக்காரர்கள் புறக்கணிக்கக் கூடாது. கீழே காணும் பண்பற்ற செய்கைகளைச் செய்வதும் கூடாது. அதற்காகக் கடுமையாகத் தண்டிக்கப் படுவார்கள்.

(அ) நடுவர்களை மரியாதை குறைவாகப் பேசுதல், அவர்களது செயல்களில் குறுக்கிட்டுத் தடை செய்தல்.

(ஆ) நிந்தனையான சொற்களைப் பயன்படுத்துதல். (இ) எதிராளியைத் தொல்லைக்கு உள்ளாக்குதல் அல்லது அவர் கண்களுக்கு அருகில் கைகளை அசைத்துப் பார்வையை (நோட்டம்) மறைத்தல்.

(ஈ) குறித்த நேரத்திற்குள் பந்தை விளையாட்டில் இடுவதைத் தடுத்து ஆட்டத்தைத் தாமதம் செய்தல்.

(உ) தவறு என்று தன்மேல் குற்றஞ் சாட்டப்பட்டப் பிறகும், கையை தலைக்கு மேலே உயர்த்தி, ஒழுங்காகத் தன்னை காட்டாதிருத்தல்.

(ஊ) குறிப்பாளரிடமும் நடுவரிடமும் முன்கூட்டியே அறிவிக்காமல், தனது ஆடும் எண்ணை மாற்றுதல்.

(எ) இடைவேளைக்குப் பிறகு நுழைவதைத் தவிர, குறிப்பாளரிடமும் நடுவரிடமும் கூறிக்கொள்ளாமல் ஆடுகளத்தின் உள்ளே மாற்றாட்டக்காரர்கள் ஆட இறங்குதல்.

தனி நிலைத் தவறுக்கான விதி மீறல் எல்லாம் உண்மை யிலேயே வேண்டுமென்றே செய்யப்படுவன அல்லது அந்தத்