பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 விளையாட்டுக்களின் விதிகள் >

இயக்குகின்ற பொழுது, இவர் உடலோடு மோதி தொடர்பு கொள்வது, ஒருவகைத் தள்ளல் என்றே கொள்ளப்படும்.

ஒரு ஆட்டக்காரர் பந்துடன் ஒடும்பொழுது, அவருடைய பாதையில் நிற்கின்ற எதிராளியை இடிக்கும்பொழுதும், இரு எதிராளிகளுக்கிடையில் அல்லது எல்லைக்கோட்டுக்கும் எதிராளிக்கும் இடையில் பந்தைத் தட்டிக்கொண்டு ஓடும் பொழுதும் உடல் தொடர்பு நேராமல் (Contact) அந்த வழியில் செல்ல முடியும் என்ற நிலையிலிருந்து அவர் அடித்தால், அவர் மீது அப்பொழுது குற்றஞ்சாட்டப்பட மாட்டாது. உடல் தொடர்பு ஏற்படாதவாறு பந்துடன் ஓடி எதிராளியைக் கடக்கும் நேரத்தில், தலையும் தோளும் முன்னோக்கிப் போக அப்பொழுது ஏற்படுகின்ற உடல் தொடர்புக்கு எதிராளியே காரணமாவார்.

பந்துடன் ஒடும் ஒரு ஆட்டக்காரர், தான் செல்வதற்கான நெறியான பாதை ஒன்றை நிறுவிக் கொண்டிருந்தால், அவரது வழியைச் சுற்றிக் கும்பல் இருக்கக் கூடாது. ஆனால் விதிகளின்படி ஒரு எதிராளி, அவரது பாதையைத் தடுத்துக் கொண்டிருந்தால், ஒன்று பந்துடன் ஓடுபவர் தன் ஓடும் திசையை மாற்றிக் கொள்ள வேண்டும் அல்லது தான் பந்துடன் ஓடுவதை முடித்துக் கொள்ள வேண்டும்.

தகுந்த இடத்தை அடையவிருக்கும் ஒரு ஆட்டக்காரரைத் தடுக்க முயலும் எதிராளி ஒருவர், அவரைத் தடுக்கத் திரை போல (Screen) கையை வீசி மறைப்பதால் அப்பொழுது பந்தை எடுத்து விளையாட சிறிதளவு முயலும் நேரத்தில்கூட ஏதாவது உடல் தொடர்பு ஏற்பட்டாலும், அதற்கு அவரே முற்றிலும் பொறுப்பாவார்.

(அ) எதிராளிக்கு வெகு அருகிலுள்ள இடத்திலிருந்தால், அவருக்கு சாதாரண நிலைமையில் ஏற்படும் அசைவுகளால்கூட தள்ளுவதோ அல்லது இடித்தலோ நிகழக்கூடும். அல்லது,

(ஆ) நகர்ந்துவரும் எதிராளியின் வழியிலோ (அந்த இடத்திற்கு) அவர் வேகமாக வரும்போது, அங்கு இடிப்பதையோ அல்லது தள்ளுவதையோ தடுப்பதென்பது முடியாது.

பந்தைத் தன் கட்டுக்குள் வைத்திருக்கும் எதிராளியிடமிருந்து வெளிப்படையாக வேண்டுமென்றே அப்பந்தைப் பெற விரும்பும் ஒரு ஆட்டக்காரர், உடல் தொடர்பு கொள்கிறார் என்றால் அது வேண்டுமென்றே செய்யப்படும் தவறாகும்.

பந்தைத் தன்வசம் பெற்றிராத ஒரு ஆட்டக்காரர் மேல், தவறு இழைக்கப்படுவது இயற்கையானதல்ல. பந்தை தன்வசம்