பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 விளையாட்டுக்களின் விதிகள் *ES

சுயேச்சையான நடைமுறைக்குப் பங்கம் விளைவிப்பதாகும். ஒரு ஆட்டக்காரரின் பின்னால் இருந்து கொண்டு அவரைக் காத்து நிற்பது, அவருடன் மோதிக் கொள்ளும் நிலையை உண்டாக்கி, தனியார் தவறைச் செய்ய வைக்கும். நடுவர்கள் இதுபோன்ற விதிமீறல்களில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். தடுக்கும் ஆட்டக்காரர், பந்தை விளையாட முயற்சி செய்கிறார் என்ற முடிவுக்கு வந்துவிடக் கூடாது. நிற்கத்தகாத இடத்திலிருந்து கொண்டு, பந்தை எடுக்கும் முயற்சியில் ஈடுபடும் தடுக்கும் ஆட்டக்காரரைக், கட்டாயம் தண்டிக்க வேண்டியது அவசியமாகும்.

3. 37-stol-33sus) (Double Foul)

இரட்டைத் தவறென்பது (Doublefoul) எதிராளிகளான இருவர் சேர்ந்தாற்போல் ஒரே நேரத்தில் ஒருவர்க்கொருவர் தவறினை இழைத்துக் கொள்வதோகும். இரட்டைத் தவறு நடக்கும் பொழுது, தனி எறி கொடுக்கப்படுவதில்லை. ஆனால், தவறிழைத்த ஒவ்வொருவர் மேலும் தனியார் தவறு சுமத்தப்படும்.

தவறிழைத்த ஆட்டக்காரர்கள் இருவரும் அருகாமையிலுள்ள வட்டத்தில் நடைபெறும் பந்துக்காகத் தாவலில் பங்குபெற, ஆட்டம் தொடங்கும்.

4. Lisrqpeop susp (Multiple Foul)

ஒரு எதிராளியின் மேல் ஒரே குழுவைச் சேர்ந்த இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆட்டக்காரர்கள் ஏறக்குறைய ஒரே சமயத்தில் தவறிழைப்பதே பன்முறைத் தவறாகும் (Multiplefoul).

இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட எதிராளிகள் ஒரு ஆட்டக்காரர் மேல் (தனியார் தவறுகள்) தவறு இழைக்கும் பொழுது, தவறிழைத்த ஒவ்வொருவர் மேலும் ஒவ்வொரு தனியார் தவறு சாட்டப்பட, அங்கு எத்தனை தவறுகள் சாட்டப்பட்டாலும் அந்தத் தவறுக்குள்ளான ஆட்டக்காரருக்கு இரண்டு தனி எறிகள்தான் தரப்படும்.

வளையத்தில் பந்தைக் குறியுடன் எறியும் நேரத்தில் அவர் தவறுக்கு இலக்கானாலும், தன் முயற்சியில் வெற்றி பெற்றால், வெற்றி எண் கணக்கில் சேரும். தவறுக்காகத் தனியே தனிஎறிகள் தரப்படமாட்டாது. ஆனால் தவறிழைத்தவர்கள் அத்தனை பேர் மேலும், ஒவ்வொரு தனியார் தவறு சுமத்தப்படும். அதன்பின், கடைக்கோட்டுக்கு அப்பால் இருந்து பந்தை உள்ளெறிய, ஆட்டம் தொடங்குகிறது.