பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


10

போட்டி முடிந்துவிட்டது. பரிசளிப்பதற்கு முன்னர், பரந்த அந்தத் திடலில், சிறந்த முறையில் விளையாடிய வீரர்களே பாராட்டிப் பேச மன்னர் எழுந்தார், பொது மக்களும் வீரர்களும் பரபரப்புடன் மன்னரது முகத்தையே ஆவலுடன் பார்த்த வண்ணமிருந்தனர். மன்னருக்கோ தம் மாருத மனக்குறையினை வாய்விட்டே கூறிவிட வேண்டும் என்ற உணர்வு... சொற்பொழிவைத் தொடங்கியும் விட்டார்.

"நம்முடைய நாட்டில் இப்படி ஓர் ஏழ்மை நிலை இருக் கிறது என்று இதுவரையிலும் எமக்குத் தெரியாமற் போனது பெருங்குறையே. அதறகாக மிகவும் வருந்துகிருேம். இவ்வளவு ஆர்வமுடைய வீரர்கள் நம நாட்டில் இத்தனை பேர்களா இருககிருர்கள் ? இத்தனை பேர்களுக்கும் ஒரே ஒரு பந்துதான ? இந்தப் பந்துக்காகவா இப்படி ஒடியும் சாடியும் மோதியும விழுந்தும் புரண்டும் வேதனை அடைந்தார்கள் !

இந்த நிலைமை இனி நீடிக்கக் கூடாது. ஆகவே நமது அரசு, ஆட்டக்காரர் அனைவருக்கும் ஆளுக்கு ஒரு பந்தை வழங்கி ஆடச் செய்து பந்துக்கு ஏறபட்ட பஞ்சத்தைப் போக்கும். இனிமேல் வீரர்களும் அமைதியாக ஆனந்தமாக நின்று விளையாடலாம்."

அரசரது பேச்சைக் கேட்டமக்கள் நிலை எப்படி இருந் திருக்கும் ?

பந்து பிறந்த கதையை சொல்வதற்கு முன், பந்து பற்றிய சிந்தனையே இல்லாதவர்களின் நிலையினை விளக்கும் கேலிக கதை ஒன்றினே முன்னே கூறிகுேம். இது ஒரு செவிவழிக் கதை. நகைச்சுவைக்காக நாடாள்வோர்பற்றி மைதானத்திலே பேசிக் கொள்கின்றபோது பிறந்த பொழுது போக்குக்கதை.