பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



11

பந்து எப்பொழுது பிறந்தது ? எங்கு பிறந்தது என்று கேட்டால், அது மக்கள் தோன்றிய காலத்தேதான் பிறந்தது எனலாம். விளையாட்டுணர்ச்சி தோன்றிய காலத்தே இந்த பந்து பற்றிய உணர்வும் தோன்றியது என்பார் ஆராய்ச்சி வல்லுநர்கள். வேறுபல விளைளயாட்டுக்கள் அக்கால மனிதர்களுககு இருந்தன என்றாலும், பந்து தோன்றியதன் காரண்ம துன்பமூட்டவும், பொழுது போககவும், நிரந்தரமான நீடித்த மகிழ்ச்சியைத தரவுந்தான் எனபது பலருடைய கருத்தாகும்.

இந்த பந்து பற்றிய கருத்து, உருண்டையான கூழாங்கற்களில் இருந்தே தொடங்கியிருக்கிறது. ஓடுதற்கேற்றவாறு அமைந்த உருண்டையான கற்களை விரலகளால் உருட்டி மகிழ்ந்த மக்கள், குச்சிகளால் உருட்டித் தாளி ஓடவிட்டு மகிழ்ந்திருகின்றனர். இவ்வாறு உருண்டை கற்களின் சிறிய வடிவம். மரத்தில் பழுத்துத் தொங்கிய பழங்களின் அளவாக சிறிது சிறிதாகப் பெருகி பெரிதாகிக் கொண்டே வந்திருகிறது.

முதலில் கற்களையும், பிறகு கனிகளையும் உருட்டி விளையாடிய ஆதிகால மககள், மரத்திரில், உருண்டையான கட்டைப் பந்துகள் உருவாக்கி ஆடினர். அதன் பிறகு, வேட்டையாடிய மிருங்களைத் தோலுரித்து அதை தோல் பை போலத் தைத்து, அதனுள் மயிர் போன்ற பொருட்களைத் துணிந்து ஆடி மகிழ்ந்தனர். பந்தின் அவசியமும் தேவையும் பெருக பெருக, நுட்பமும் நூதனமும் புரியப் புரிய தோல் பையினுள் காற்றடைக்கும் விந்தையைக் கண்டுபிடித்தனர் என்பது சரித்திரம் காட்டிவரும் சான்றாகும்.

என்றாலும், பந்தின் பிறப்புக்கு எகிப்தில் வழங்கப்படுகின்ற கதை அதிசயமாக மட்டுமல்ல, அதியற்புதமாகவும் விளங்குகின்றது.