பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13

அன்பையும், அனுக்கிரகத்தையும் அடைய எகிப்தியர்கள் முயல்வது மத வழக்கமாக மாறிவிட்டிருந்தது.

அதனால், வசந்த காலம் வந்த உடனேயே, ஓசிரிஸின் பக்தர்கள் அத் தெய்வத்தின் அமைப்புள்ள சில வடிவை ஏந்திக்கொண்டு, தெருவெங்கும் ஊர்வலமாக வந்து, பாப்ரமிஸ் எனும் ஆலயத்திற்குள் நுழைய முயற்சி செய்வார்கள். அந்தக் கோயிலைக் காத்து நிற்கின்ற செட் கடவுளின் பூசாரிகளும், அவர்களது அனுதாபிகளும் ஊர்வலம் வந்தவர்களை வழியிலும், வாசலிலும் நின்று. தடுப்பார்கள் இந்த உரிமைப் போரின் உச்சக்கட்டம், இரு பக்கத்தாரும் வளைவான கம்பிகளினால தாக்கிக் கொள்ள, இறுதியிலே கொலையிலே வந்து முடியும். இவ்வாறு ஒவ்வொரு வசந்த காலத்திலும் உயிர்க் கொலைகள் மிகுந்து கொண்டே போவதைத் தடுக்கவேண்டும் என்று விரும்பிய மக்கள், வேறு ஒரு புது முறையைக் கையாளத் தொடங்கினர்.

மனிதர்களின் ஊர்வலத்திற்குப் பதிலாக (பொம்மலாட்டத்தில் பயன்படுகின்றது போல்) தோல் பொம்மைகளை வைத்து, அவைகளை மோதிக்கொள்ளச் செய்து, வேடிக்கை பார்த்து மகிழ்ந்தனர் எகிப்தியர்கள்.

அந்தத் தோல் பொம்மைகள் அடிக்கடி சண்டை சமயத்தில் அடிக்கப்படும்போது கிழிந்து போகத் தொடங்கின. உடல் கிழிந்து போனாலும் உருண்டைவடிவமான தலைப்பாகம் மட்டும் தனியாகத் தெரியத் தொடங்கியது. அந்தத் தலைகளே அவர்களுக்குத் தாக்கப்படும பிரதான பொருளாகவும் தெரியத் தொடங்கின.

ஆகவே, உருண்டைப் பொருளான தலையை மட்டும் வைத்துக்கொண்டு தாக்கினால் போதும் என்று எதிரெதிர்க் குழுவைச் சேர்ந்தவர்கள் எண்ணத் தொடங்கினர். அவ்வாறு