பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

உருண்டையாகத் தோன்றிய அந்த அடிபடும் தலையின் அமைப்பே, இக்காலப் பந்தின் வடிவமைப்புக்குக் காரணமாகிவிட்டது என்ற அதியற்புதக் கதையே இன்றும் உலவி வருகிறது.

தீமைக் கடவுளுக்கும் நன்மைக் கடவுளுக்கும் உரிய அன்பர்கள், எதிரெதிர்க் குழுவினர்களாகவும், அவர்கள் கையில் வைத்துத் தாக்கிய தடிகளே ஆடப் பயன்படும். கோல்களாகவும், தோல் பொம்மையின் உருண்டை வடிவமே, பந்தின் அமைப்பாகவும் மாறி வந்தது என்பது பலர் கருத்து.

மேற்கூறிய நிகழ்ச்சியும், கதை அமைப்பும் கி.மு 2000 ஆண்டுகளுக்கு முன் எகிப்திலே நடந்தகாக சரித்திரச் சான்றுகள் தெரிவிக்கின்றன. உலகெங்கும் பந்து விளையாட்டு பற்றிய நிசழ்ச்சிக் குறிப்புகள் நிறைந்திருக்கின்றன என்றாலும், தமிழ் இலக்கியத்திலும். வடமொழி இலக்கியத்திலும் கூட பந்து பற்றிய குறிப்புகள் நிறைய இருக்கின்றன.

நம் நாட்டின் பண்டைய புராண இதிகாச இலக்கியமான வான்மீகி இராமாயணத்தில், சீதை பூக்களினால் ஆக்கப்பட்ட பந்து ஒன்றை வைத்தக்கொண்டு தன் தோழியர்களுடன் விளையாடிக்கொண்டிருந்ததாக ஆசிரியர் அழகாக விளக்கிச் செல்கின்றார்,

ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரத்தில். 'கந்துகவரி' என்ற அமைப்பில், பெண்கள் பந்தாடி, அரசர்களையும் அவர்களது ஆற்றல்மிகு செயல்களையும் புகழ்ந்து பாடுவதாக இளங்கோவடிகள் கவி புனைந்துள்ளார்.

சிந்தாமணியில் வருகின்ற சீவகனின் மனைவி ஒருத்தி பந்து விளையாடியதாகவும், மற்றும் பல இலக்கிய நூல்களில் பத்து பற்றிய குறிப்புகளும் தெரியக் கிடக்கின்றன. ஆகவே