பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பந்தைத் தேடும் ஆவலில், அவள் விழிமீன்கள் பாயத் தொடங்கின. ஓரிடத்தில் வந்தபோது மயங்கி நின்றன. அங்கே ஒரு அழகான வாலிபன் நின்று கொண்டிருந்தான். "அவளும் நோக்கிளுள். அவனும் நோக்கினன், கண்டதும் காதல் என்பார்களே ! அது அந்த அரசகுமாரிக்கு வந்து. விட்டது. என்ன செய்வது ? இறங்கிவந்து பேச முடியுமா ? யோசித்து ஏதாகிலும் செய்யலாமென் ருல். யாராவது வந்து விட்டால் காரியம் யாவும் கெட்டுப் போகுமே ! அவள் உடனே ஒரு முடிவுக்கு வந்தாள். தன் பீலிவளைக் காதிலே அணிந்திருந்த காதோலையை எடுத்தாள். கை நகத்தைப் பதித்தாள், 'அன்பே, இரவு உம்மை ஊர்ச்சாவடியில் வந்து சந்திக்கிறேன்" என்று எழுதி, அவன் முன்னே எறிந்து விட்டு மின்னலென மறைந்து போனுள். ஒலைபெற்ற இளைஞன் மனம் ஊளையிடத் தொடங்கியது. மாலையணிந்த மைவிழி அழகி, விழித்து நோக்கி, வீசி எறிந்து விட்ட ஒலையில் என்ன இருக்கும் என்று படிக்கத் தெரியாத முட்டாள். தற்குறி, பயந்து நடுங்கின்ை. எதிரே வந்த ஒரு கு ஷ்டரோகியிடம். என்ன எழுதியிருக்கிறது இந்த ஒலையில் என்று கேட்டான். பட்டுமேனியாளின் மனமறியாப் பாவியாம் அந்த முட்டாளே ஏமாற்ற எண்ணின்ை அந்தப் புண் பிடித்த பொல்லாத நோயாளி. "இன்று இரவுக்குள் இந்த ஊரை விட்டுப் போகாவிட்டால், நாளே காலை உன்தலை துண்டிக்கப்படும்' என்று படித்தான், ஏற்கனவே பயந்திருந்த அவன் துடித்தான், பின்னும் இருப்பானே அங்கே ! பயந்தேவிட்டான் பாழும் உயிரைக் காத்துக் கொள்ள, இரவு வந்தது, உறவு தேடி வந்த ஒய்யாரியின் விரைவு ஊர்ச்சாவடிக்குள் நுழைந்தது, இருள் மறைவிலே காத்திருந்த