பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25

திருக்கலாம். ‘தேடி வரும் மிருகங்களை சாடி தற்காப்புக்குத் தயாராயிருக்கலா’ என்று உணர்ந்து கொண்ட மூளை, அதற்குத் தக்க வழி என்ன என்று கேட்ட கேள்விக்கு. விடையாகப் பிறந்துதான், விளையாட்டாக மலர்ந்தது.

ஒருவருக்கொருவர் தொட்டு விளையாடுவது ஓடிப்பிடித்து ஆடுவது, மறைந்திருந்து கண்டு பிடித்து, விளையாடுவது போன்ற நிகழ்ச்சிகள், வேட்டையாடுதல், நீருள் புகுந்து, நீந்துதல் எல்லாம் சலிப்பைத் தந்தபோது, சுவையில்லாத சூழ்நிலையைக் கொடுத்த போது, ஏதாவது ஒரு துணைப் பொருளுடன் ஆடினால்தான். சுவையாக இருக்கும் என்று. வங்கியது உள் மனம். இல்லாத ஒன்றுக்குத்தான் மனம் துங்கும் என்றாலும் “தேவைதானே கண்டு பிடிப்பின் காய்” அந்த நிலையிலே அறிவு தன் ஆராய்ச்சியைத் தொடங்கியது.

உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் மரங்களில் தொங்கிக்கொண்டிருக்கும் கனிகள். மண்ணில் விழுந்து உருண்டோடியதும், மழமழவென்றிருக்கும் உருண்டைக் கூழாங்கற்கள். கால் பட்டு உருண்டோடியதும் அவர்கள் கண்ணில் பட்டன. நெஞ்சைத் தொட்டன. உருண்டைப் பொருள்களை எடுத்த உருட்டி விட்டால் எப்படி இருக்கும் என்ற உணர்வில் எழுந்து விட்ட உற்சாகம், கனி களேயும் கற்களையும் எடுத்த உருட்டத் தொடங்கியது. பள்ளம் நோக்கி அவைகள் துள்ளி ஓடியதுபோல, உள்ளமும் துள்ளியது உவப்பால், உற்சாகத்தால், விரல்களால் தள்ளினர். விழிகளால் அள்ளினர். வேட்கை தணிந்ததால் விம்மினர் மகிழ்ச்சி பொங்க, சின்னஞ்சிறு பழங்கள் கற்களி லிருந்து, பெரிய அளவுள்ள பழங்கள் எல்லாம் அவர்கள் ஆனந்தத்தில் பங்கேற்றன. ஆர்வப் பசியைத் தீர்த்தன.