பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


27 லாம் என்பதை மக்கள் உணர்ந்தனர். அதுவே கூடி விகளயாடும் குழுவிளையாட்டுகளாகப் பிறந்து பரிணமித்தன. ஆட்டக்காரர்கள் பலராக மாறிலுைம் ஆடப்பெறும் பந்தும், அந்தந்த சூழ்நிலைக்கேற்பவே மாறத் தொடங்கியது. ஆகவே பந்தின் எடையும், தரமும், அளவும் நிலையும் மாறி மாறி வரத் தொடங்கியது. இவ்வாறு மாறிய பந்துகளே ஆராய்ச்சி அறிஞர்கள் மூன்று வகைகளாகப் பிரித்துக் காட்டினர். பந்து தொடங்கிய காலத்தில், கல்லும் மரக் கட்டை களுமே பழக்கத்தில் பயன்பட்டு இருந்ததைப் போல் ஒரு சில பந்துகள் மிகவும் கடினமாக, கல்போல அமைந்தன. கெட்டியாக அமைந்த அப் பந்துகள் கிரிக்கெட் வளைகோல் பந்தாட்டம், குழிப் பந்தாட்டம். (Golf) தளப் பந்தாட்டம் போன்ற ஆட்டங்களில் பயன்படுத்தப்பட்டன! பந்தின் கடினத்தையும், கனத்தையும் பொறுக்க இயலாத காரணத்தால் தான் அவைகளே வகளந்த கோல்களைக் கொண்டு, ஓங்கி அடித்து விளேயாடினர். கைகளாலும், கால்களாலும் இயல்பாக சுகமாக விளேயாடும் விருப்பத்திற் கேற்ப வேதனை தெரியாமல் விளையாட, காற்றடித்தப் பந்து களைக் கண்டனர். அதாவது தோலுறையுள் காற்றைச் செலுத்தித் துள்ள விட்டு ஆடினர். ஆகவே, உருளு பந்தின் தன்மை மாறி, உயரே துள் வரும் பந்துகளாகி கைப்பந்தாட்டம் கால்பந்தாட்டம், கூடைப் பந்தாட்டம் போன்ற ஆட்டங் களில் இடம் பெற்றன. துள்ளும் பந்து தோன்றிலுைம் அதிலே இன்னும் மெல்லிய தன்மையில் இயங்கும் பந்தை உருவாக்க முடியுமா என்று ஆராயத் தொடங்கி விட்டனர் ஆர்வ முள்ளவர்கள். துள்ளவும் வேண்டும் அதே நேரத்தில் ஆடுதற்கு மிகவும் இலேசாகவும் இருக்கவேண்டும் எ ன் று மு ய ன் று கண்டுபிடித்தனர். அதன் விளைவு தான் மேசைமேல் ஆடு