பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32


வயிற்றுக்கு அவை உணவு என்று ஆகிவிட்ட கதை தொடரவே, வேட்டையாடும் தொழில் விருத்தியடைந்தது வளர்ச்சி மிக்கதாய் காட்சி தந்தது.

வாழ்க்கை வசதி பெருகப் பெருக. தொழிலானது மக்களுக்கெல்லாம் பொழுதுபோக்காக மாறிவிட்டது. ஆரம்ப காலத்திலிருந்த மனிதனுக்குரிய அரக்க மனம், என்னதான் ஆறாவது அறிவு பண்பட்ட நிலைக்கு மாறி வந்தாலும், ஆங்காங்கே கொடுமைகளை விளைவிக்காமல் இருந்ததேயில்லை. விளையாட்டில் மட்டும் எப்படி இல்லாமல் இருக்க முடியும்?

பொழுது போக்கவும், அலையும் மனதை ஆனந்தப் படுத்தவும், எல்லோரும் கூடி உல்லாசமாக மகிழ்ந்திருக்கவும், செய்யக்கூடிய விளையாட்டுக்களில் எல்லாம் வெறித்தனம் எப்படியெல்லாம் விளையாடியிருக்கிறது என்பதை வரலாறு காட்டும்போது, நாமெல்லாம் வாயடைத்துப் போய் விடுகிறேம். ஆதிகால வரலாற்றை படித்துப் பாருங்கள் புரியும்.

காரிருள் விலகாத காலைப் பொழுது, கைகளில் கரடு முரடான வளைந்த தடியைப் பிடித்திருக்க ஆயிரக்கணக்கான மக்களடங்கிய ஒரு கூட்டம் ஒருபுறம் நிற்கிறது. அதே கணக்கில் மற்றெரு புறம் வளைநத தடியுடன் இன்னுெரு கூட்டம் இருக்கிறது. செவ்விந்தியர் கூட்டத்தினர்தான் அவர்களனைவரும். விளையாடத்தானேயன்றி வேறெதற்கும் நிற்கவில்லை.

இரண்டு கூட்டத்திற்கு இடையிலே மரத்தாலான சிறிய பந்து ஒன்று கிடக்கிறது. அந்தப் பந்தை அடித்து எதிர்க் குழுவினருக்குரிய எல்லையில் சேர்த்துவிட்டால் வெற்றி என்பதுதான் ஆட்டத்தின் நோக்கம். ஆடத் தொடங்கி விட்டால் அவர்கள் பந்தை மட்டும் அடிக்க மாட்டார்கள். ஆளையும்தான், ஆளுக்கு விழுகின்ற அடி மரண அடியாகக்