பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

தங்கள் வரலாற்றுக் குறிப்பில்எழுதுவார்கள் என்பதுதான். நாடறிந்த உண்மை. இந்த உண்மையை இன்று யார் மதிக்கிறார்கள் ? “வெற்றிக்காகத்தான் விளையாடுகிறோம், வெற்றியால் வருகின்ற புகழுக்காகத்தான் விளையாட்டு வீரர்களை அனுப்புகிறோம்” என்று எல்லா நாடுகளுமே போட்டி போடத் தொடங்கிவிட்டன. இல்லை என்றால் இப்பொழுதெல்லாம் நடக்கின்ற விளையாட்டுப் போட்டிகளில் வெறித் தனமும் விவேகமற்ற செயல்களும் தொடர்ந்து நடக்குமா ? நடந்து முடிந்த ஒலிம்பிக் பந்தயங்களைத்தான் நாம் பார்த்தோமே ! கூடைப் பந்தாட்டத்தில் வெற்றி நாடாக இருந்து வந்த அமெரிக்கா. இந்த ஒலிம்பிக்கில் ரஷ்யாவிடம் தோற்றன.

கைப்பந்தாட்டத்தில் இதுவரை வெற்றி நாடாகயிருந்து வந்த ரஷ்யா ஜப்பானிடம் தோற்றது கால் பந்தாட்டத்தில் இதுவரை வெற்றி நாடாக இருந்து வந்த ஹாலந்து ருமேனியா விடம் தோற்றது. வளைகோல் பந்தாட்டத்தில் வெற்றி நாடாக இருந்த இந்தியாவும் பாகிஸ்தானும் மேற்கு ஜெர்மனியிடம் தோற்றன.

எத்தனை நாடுகள் தங்கள் தோல்வியை ஒப்புக் கொண்டன ? எத்தனை நாடுகள் எதிர்க்குழுவினரின் விளையாட்டுத் திறனை விவேகமுடன் போற்றிப் புகழ்ந்தன ? அத்தனை நாடுகளுமே நடுவரை இகழ்ந்தன. எதிர்க் குழுவினரை இகழ்ந்தன. அதற்கு முத்தாய்ப்பு வைப்பது போல பாகிஸ்தான் குழு' ஒலிம்பிக் பந்தயப் பதக்கங்களையும், குழுவினரையும் இழிவு படுத்திய இழி நிலையைத்தான் நாம் பத்திரிக்கைகளில் படித்தோமே !

'பிறரை வேதனைபடுத்துவதற்காக விளையாடக்கூடாது தங்கள் மகிழ்ச்சிக்காகவே விளையாட்டு' என்பதை வீரர்கள் உணரவேண்டும். கலை கலைக்காவே' என்பதுபோல 'விளையாட்டு என்பது விளையாட்டுக்காகவே' என்பதை உணர்ந்து விளையாடி வாருங்கள். விளையாடி மகிழுங்கள். வலிவான உடலுடன் திகழுங்கள். வாழ்க்கையின் நோக்கமும் இது தானே !