பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

39

பறவையே அவனுக்குப் பரிசாகக் கிடைத்துவிடும். அந்த விளையாட்டில் தோற்றால் அந்தப் படகில் உள்ளவர்கள், அங்கிருந்தே அவனைத் தண்ணீரில் தூக்கியெறிந்து விடுவார்கள். இப்படி ஒரு கழுத்தறுக்கும் விளையாட்டு.

ஒவ்வொரு ஆளுக்கும் ஒவ்வொரு பறவை என்று கொன்று விளையாடிய இந்த இரத்த வெறி பிடித்த விளையாட்டை, இன்னும் கொஞ்சம் மாற்றி ஆடினார்கள் அமெரிக்க மக்கள். டச்சு நாட்டிலே இருந்து வந்த ஆட்டம் வெகு விமரிசையாக இங்கு வரவேற்கப்பட்டது, ஆற்றைத் தேடிக் கொண்டு அடிக்கடி போகவேண்டும் என்பதற்காகவோ என்னவோ, அவர்கள் மரத்தை நம்பத் தொடங்கி விட்டார்கள். ஆற்றின் நடுவே கட்டிய பறவையை மாற்றி ஒரு மரத்தின் கிளையில் தலைகீழாக கட்டித் தொங்க விட்டிருப்பார்கள், படகுக்குப் பதிலாக, குதிரை மீதேறி ஒரு கொம்பன் தலையைக் கொய்ய வருவான். வருகின்ற வேகத்திலேயே அந்த இடத்தைக் கடப்பதற்குள் பறவையின் தலையைப் பிய்க்க வேண்டியதுதான் ஆட்டம். முயற்சி செய்யும் பொழுது, பறவையின் கழுத்து முறிந்தாலும் முறியும். சமயத்தில் குதிரை வீரனின் இடுப்பு ஒடிந்தாலும் ஒடியும். ஆமாம் . தலைகிடைத்தால் பறவை அவனுக்கு கொலைசெய்ய முடியாமல் போனால் குதிரையிலிருந்து கீழே விழுந்த தண்டணை அவனுக்கு, இதைப்பார்க்க ஏராளமான கூட்டம். எப்படியும் கைதட்டி மகிழ கூட்டத்திற்கு வாய்ப்புண்டே.

பொழுது போக்குவதற்காகக் கழுத்து நீளமுள்ள பறவைகள், கிடைக்கவில்லையோ என்னவோ தெரியவில்லை. அந்த ஆட்டத்தின் சுவை குறைந்தது. அவர்களின் நோக்கம் வான் கோழியை நோக்கிப் பாய்ந்தது. கான மயிலாடக் கண்டிருந்த வான் கோழி தானும் அதுவாய் பாவித்து, தன் பொல்லாச் சிறகை விரித்து ஆடத் தொடங்கியதாகத்தான் நாம் படித்திருக்கிறோம். ஒடியதாக நமக்குத் தெரியவில்லை. அமெரிக்க மக்கள் வான் கோழிகளைப் பிடித்து ஓட ஓட விரட்டியிருக்