பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

கிறார்கள். ஆமாம். வான் கோழிகளுக்கு ஒட்டப் பந்தயம் விட்டு, பந்தயம் கட்டி விளையாடியிருக்கின்றனர். அவர்கள் கொடுத்த அடிக்கும் இடிக்கும்பயந்து அவைகள் ஒடித். தொலைந்தன. நம்மவர்கள் இப்பொழுது குதிரைமேல் பணத்தைக்கட்டித் தொலைப்பது போல, அந்நாட்டுப் பணக் காரர்கள் ஆயிரம் ஆயிரமாக ரூபாய்களை வான் கோழிப், பந்தயத்தில் விட்டிருக்கின்றனர். நாம் ஆடவிட்டுப் பார்த்தோம். அவர்கள் ஒடவிட்டுப். பார்த்தார்கள். அதோடு விட்டுவிடவில்லை, சாராயக்கடைகள் தோறும் இந்த சரித்திரக் குறிப்பு பெற்ற வேடிக்கை விளையாட்டை ஆடி அனுபவித்தார்கள். அந்த பறவையை அழிக்கத் தொடங்குவது போல இன்னும் ஒரு புது விளையாட்டைக் கண்டு பிடித்து விளையாடத் தொடங்கினர். 100 கெஜ தூரத் திறகு அப்பால் வான் கோழியை நிறுத்தி வைத்துத் துப்பாக்கியால் சுட்டுத் தங்கள் குறிபார்த்து சுடு, வெறியைத் தீர்த்துக் கொண்டார்கள். சுட வந்தவன் அதற் கென்று ஆயிரமாயிரம் ரூபாய்களே பந்தயமாகக் கட்டி விட்டு சுடத் தொடங்குவான். பறவையைச் சுட்டு விட்டால் பரிசு. அந்த வான் கோழியே! தோற்ருல் கட்டிய பணமெல்லாம். தொலைந்ததுதான். வான் கோழி மட்டுமா வதைபட்டது! கோழிகளுங் கூடத் தான். ஏழைகளின் பொழுது போக்காக இருந்த இந்தக் கோழிச் சண்டைக்கு, அகில உலகக்கு கோழிச் சண்டை கழகமே ஆரம்பிக்கின்ற அளவுக்குப் பெரும் புகழும் பெருகியது. கொழு கொழுவென்று. கோழிகளை வளர்த்தக் கொண்டு அதன் கால்களிலே கத்திகளைக் கட்டி விட்டு சண்டை போட்டுக் கொள்ளச் செய்தனர். எந்தக் கோழி ஜெயிக்கும் என்று கூட பணத்தைப் பந்தயம் கட்டாமல், எந்தக் கோழிக்கு முதலில் இரத்தக்காயம் ஏற்படும் என்பன