பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

நாய்களை வளர்த்தார்கள். மடிமீது வைத்துக் கொஞ்சி வீதிகளில் வெள்ளோட்டம் விடவா? அல்லவே அல்ல? வெறித்தனமான தங்கள் விளையாட்டுக் கொடுமைக்கு விருந்து வைக்கத்தான்.

கூண்டு ஒன்று செய்யப்பட்டிருக்கும் பணத்தை ஆண்டு கொண்டிருக்கும் பண்பாளர்கள் எல்லாம் கூடி, சுற்றிலும் அமர்ந்து வேடிக்கை பார்த்து மகிழ்வதற்காக இருக்கைகள் கூண்டைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கும். கூண்டிற்குள்ளே கரடி ஒன்றைக் கட்டவிழ்த்து விட்டு வேட்டை நாய்கள், ஐந்து அல்லது ஆறை அவிழ்த்து உள்ளே விட்டு விளையாட்டுக் காட்சியை தொடங்கி விடுவார்கள். அந்த ஆட்டம்—ஒன்று கரடி நாய்களால் கடிப்பட்டு இறக்கும் வரை தொடரும். அல்லது கரடியால் அறையப்பட்டு நாய்கள் குற்றுயிராய் கீழே கிடந்து மிதிபடும் வரைவளரும். வேடிக்கை பார்ப்போர் விண்ணதிரக் கூச்சலிட்டுத் தங்கள் ரசிகத் தன்மைக்கு இரை தேடி விழுங்கி மகிழ்ந்தனர். கரடி கிடைக்காத நேரங்களில் காளை மாடுகளும், இந்த போராட்டத்தில் விடப்பட்டன. எப்படி இருந்தாலும் மக்களுக்கு வேண்டியது மகிழ்ச்சிதானே.

கரடியிடம் அறைபடவும் காளையிடம் மிதிபடவும் போன்ற வாய்ப்புக்களைப் பெற்ற நாய்களுக்கு. இன்னும் சில சமயங்களில் வேறு வகையான விருந்தும் கிடைத்தது, ஆமாம். முன்னே விவரித்த விளையாட்டுக் கொடுமைகளுக்கு விறுவிறுப்பும் பரபரப்பும் குறையும் வேளைகளில் வேறு ஒரு மாற்று விளையாட்டு வேண்டுமல்லவா? அதிகமான எண்ணிக்கையில் எலிகளைப் பிடித்து வைத்து வளர்த்துக் கொண்டிருப்பார்கள் முதலில். நன்றாக எலிகள் வளர்ந்த பிறகு விளையாட்டுத் துன்பம் தொடங்கிவிடும்.

எந்த விளையாட்டுக்கும் பந்தயம் தான் முக்கியம். ஆகவே பந்தயம் கட்டுபவர்கள் அமர்ந்து இருப்பதற்காக