பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

43

ஆசனங்கள் அமைக்க வேண்டும். ஆனால் இந்த விளையாட்டுக்கு இருக்கைகள் முக்கியமல்ல, ஒரு ஆழமான தொட்டி அல்லது பள்ளமுள்ள பகுதியாக, விளையாட்டுக்கென்று இடத்தைத் தேர்ந்தெடுப்பார்கள். அதனுள்ளே எல்லா எலிகளையும் விட்டுவிடுவார்கள் அத்துடன் ஒரு நாயையும் உள்ளே போட்டுவிடுவார்கள். எலிகள் ஜெயிக்கின்றனவா, நாய் ஜெயிக்குமா என்ற பிரச்சனேயே அங்கு இல்லை.

நிச்சயம் எலிகள் தோற்றுத்தான் அழியும் ஆனால் அந்த விளையாட்டு வெறியர்களுடைய நோக்கம் என்னவென்றால், எவ்வளவு நேரத்திற்குள் எத்தனை எலிகளை இந்த நாய் தின்னும்? இந்த நேரக் கணக்கிற்காகப் பந்தயங்களைக் கட்டிப் பணக்காரர்கள் மகிழ்வார்கள். எலிகளுக்குத் திண்டாட்டம், பணக்காரர்களுக்குக் கொண்டாட்டம். சில சமயங்களில் நாய்களுக்குப் பதிலாக கீரியினத்தைச் சேர்ந்த பிராணியும் கீரியும்கூட அந்த பந்தயங்களில் பங்கு பெற்றன.

இவ்வாறு கைக்கெட்டுகின்ற அளவிலே கிடைக்கும் வீட்டு மிருகங்களை வைத்து, இரத்த வெறியுடன் விளையாடி மக்கள் மகிழ்ந்தனர். இதைப் பார்த்த மன்னர்களுக்கு எதுவும் தோன்றாதா என்ன? தோன்றியதே!

பெரிய சர்க்கஸ் கூடாரம் போன்ற அரங்கம் ஒன்றைக் கட்டி, அதற்குள்ளே சிங்கத்தையும் காட்டு மிருகங்களையும் மோதவிட்டு, அவைகள் ஒன்றுக்கொன்று உயிருக்காகப் போராடித் தவிப்பதிலே உள்ள மோதலைக் கண்டு முதலில் மகிழ்ந்தனர்.

ரோமானியர்கள் தொடங்கி வைத்த இந்த துரதிருஷ்டமான விளயாட்டுக் கொடுமையே பசித்த சிங்கத்திடம் போர்க் கைதிகளைத் தூக்கிப் போடச் செய்தது, சிங்கத்தோடு அந்த அடிமைகள் சிக்கித் தவித்து மிருகத்தின் வயிற்றில்