பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


44 அவர்கள் உடல் சங்கமமாகும் வரை போராட்டம் வளர்ந்தது. மிருகங்களும் மனிதர்களும் போராடியக் காட்சி அவர் களுக்கு அலுத்துவிட்டது போலும். பயங்கர ஆயுதங்களைக் கைகளிலே கொடுத்து இரண்டு அடிமைகளை பொருதிக் கொள்ளச் செய்தனர். போட்டியின் முடிவு யாராவது ஒருவர் உயிரோடு திரும்ப வேண்டும் என்பதே. இருவரும் இறந்துபோனலும் அவர்களுக்குக் கவலையில்லை. இரட்டிப்பு மகிழ்ச்சியே. இருவரும் இறக்காவிட்டால் ? என்ற எண்ணம் *"த க்கு வந்தால், அதற்கும் ஒரு வழி இருந்தது. ஆமாம். வேடிக்கை பார்ப்பவர்களே அவர்கஜனக் கத்தியாலோ வேறு. வேல்களாலோ விசிக் கொன்று குவிப்பார்கள். இதிலும் இதயம் திருப்தி அடையாத இனந்தான் மனித இனம். விலங்குகளின் விலா எலும்புகளே ஒடித்து, வீழ்த்தி, இரத்தம் பெருக்கியே குளித்துக் களித்தும் கொடுமை மிகுந்த இந்த விளையாட்டுக்கள் குறையவே இல்லை. கத்திச் சண்டை ஒன்று கண்டுபிடித்து, போரிட்டுப் புண்படுத்தி மகிழ்ந்தனர். அதையும் மாற்றி, கைகளாலேயே ஒருவரை ஒருவர் குத்திக்கொண்டு ஆடும் புதுப் போட்டி ஒன்றைப் புகுத்தி இன்பம் கண்டனர். பிறகு வேடிக்கை என்று எண்ணியோ என்னவோ. பலப் போட்டி என்று ஒன்றைத் தொடர்ந்தனர். இருவரை மேடைமேல் ஏற்றிவிட்டுக் குத்துச் சண்டை என்ருர் கள். இருவரும் வெறும் கைகளால் முகத்தில் குத்திக் கொள்ளலாம். மூக்கைக் கடிக்கலாம். நகத்தால் விழியைப் பிடுங்கலாம். பிராண்டலாம். முட்டியால் உதைக்கலாம். மயிரை இழுக்கலாம். மிதிக்கலாம். இப்படியெல்லாம் சண்டை போடலாம் என்ருல் போராட வந்திருப்போர் பயந்து வெளியேறி விட்டால் என்ன ஆவார்கள் ? மேடையே ரணகளமாகிவிடும் வேடிக்கை பார்ப்போருக்கு வேட்டை தானே ! பிறர் துன்பமே அவர்களுக்கு இன்பம்.