பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

45


இவ்வாறு, காலங்காலமாக விளையாட்டுக்கள் நடை பெற்றிருக்கின்றன. இவைகளை வீர விளையாட்டுக்கள் என்பதா? கோர விளையாட்டுக்கள் என்பதா? அறிவின் வளர்ச்சி என்பதா ? அரக்க மனத்தின் கிளர்ச்சி என்பதா?

இரத்தவெறி பிடித்தலையும் உணர்ச்சிகளுக்கு இரை தந்த விளையாட்டுக்கள் எல்லாம், கொஞ்சங் கொஞ்சமாகக் குறையத் தொடங்கின.

கொடுமை குறைந்து மனிதத் தன்மை குலவ வேண்டும் என்பதற்காக, விளையாட்டுக்களிலே வழிகளைப் புகுத்தினர். திருத்தினர்.

எவ்வாறோ, அகிலத்தை ஆட்டிப் படைக்கும் சக்தி மனிதர்களையும் ஆண்டது. அதிலிருந்து அறிவின் பாதை மீண்டது. ‘விளையாட்டுக்கள் மனித இனத்தின் வழிகாட்டி. அமைதி காக்கும் அன்புப் படகோட்டி’ என்ற நிலைக்கு மனிதப் பண்பாடு உணர்ந்து கொண்டது. விதிகளும் முறைகளும் விளையாட்டுக்களை ஆள, கொடுமைகள் கூண்டோடு மறைந்தன என்று நம்புகிறோம் நடைமுறைகள் இதை நமக்கு நன்கு காட்டவில்லையா?