பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


6. விளையாட்டுக் கலையும் நடுவர்கள் கிலையும் பொழுது போக்கவும், புத்துணர்ச்சி பெறவும் கூடியுள்ள பார்வையாளர்கள், வீரமும் விவேகமும் நிறைந்த விளையாட்டு வீரர்கள்; தங்கள் குழுவினரைக் களத்தில் செல்ல விட்டு: விட்டு, குறுகுறுக்கும் நெஞ்சுடனும் படபடக்கும் விழி களுடனும் வெளியிலே வீற்றிருக்கும் குழுமேலாளர்கள்; அங்குமிங்கும் அலைந்த வண்ணம் ஆக வேண்டியவைகளைக் கவனிக்கும் ஆட்ட அதிகாரிகள் ... அத்தனே பேரையும் வருக வருக என்று அழைப்பது. போல, ஆடுகளத்தின் நான் குபுறமும் நிற்கும் கொடிகள் தலையாட்டி வரவேற்று, மைதானத்திற்குக் க2ள கூட்டி நிற்கின்றன. அலைமோதும் வழிக் கூட்டத்திற்கிடையே ஆட்டக்காரர்கள் வருகின்றனர். குழுவுக்கு ஏற்றதோர் கவர்ச்சியான வண்ண வண்ண உடைகள் அவர்களே அலங் கரித்துக் காட்டுகின்றன.