பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

47

அவர்களுக்கிடையே ஒருவர் கருஞ்சட்டை யணிந்து கொண்டு நிற்கிறார். ஆயிரமாயிரம் கண்கள் அவரையே. மொய்த்து நிற்கின்றன, சுழல்கின்றன.

சமன் செய்து சீர்தூக்கும் கோலாக, காய்தல் உவத்தல் அகற்றி ஆய்ந்தறியும் அறிஞராக, மெய்வருத்தம் பாராது ஆட்டத்தை நடத்துதற்கும், நல்ல முறையில் கட்டுப்படுத்துதற்கும் அதிகார பூர்வமான உரிமை பெற்றுக் கடமையுடன் நிற்கின்ற அவர்தான் நடுவராவார்.

விசில் ஒலிக்கிறது. விளையாட்டு வீரர்களிடையே பந்து உதை பட்டு பறக்கிறது. பார்வையாளர்கள் பக்கமோ பல்வேறு பேரொலி சந்தைக்கடையாக வலுக்கிறது. விளையாட்டு வீரர்களைப் போலவே ஓடிக்கொண்டேயிருக்கிறார் நிற்கிறார்—நடக்கிறார்—பந்தோடு கண்களே சுழல விட்டுக் கொண்டே இருபுறமும் மாறிமாறி ஓடுகிறார். இதோ! பந்து ஒரு இலக்கினுள் நுழைந்துவிடுகிறது. அவரது விசில், நீண்ட ஒலி எழுப்பி நிற்கிறது.

வாய்ப்புக் கிடைத்து, பந்தை இலக்கினுள் உதைத்தக் குழுவினர் வாயாரச் சிரித்து, ஒருவரை ஒருவர் தழுவிக் கொள்கின்றனர். வாய்ப்பினை இழந்தவர்களின் நிலையை உங்கள் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன்.

ஆட்டம் தொடர்ந்து இத்துடன் சுமுகமாகச் செல்வதில்லை. பலரால் செல்ல விடுவதற்கோ முடியவில்லை. அங்கு சிலபல சூழ்நிலைகள் சிக்கலாகி, வெடித்தெழுகின்றன. துடித்தெழுகின்றன. (சில சயமங்களில்தான்)

தங்கள் தோல்விக்குரிய காரணங்களே ஆராய்வதற்குத் தோற்றவர்களோ அல்லது அவர்களின் சார்பாளர்களோ, முயல்வதில்லை. நடுவரின் கவனக்குறைவு என்பார் சிலர். அடுத்த குழுவை அவர் மறைமுகமாக ஆதரித்து விட்டார் என்பார் சிலர். அவருக்கு ஆட்டத்திற்குரிய விதிகளே