பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


50 விடை எழுதி வெற்றி பெற்ருலும், வாய்மூலமாகக் கேட்கப் ப்டும் கேள்விகள் அனைத்துக்கும் வழவழா என இல்லாமல் உடனுக்குடன் தெளிவாகக் கூறியும், கேட்பவர்களுக்கு மனத் தெளிவிஜன உண்டாக்கும் திறனும் வேண்டும் நிறக்குருடு இல்லாத கண்ணுேட்டம் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். இத்தனையிலும் வெற்றிபெற்று வந்துவிட்டால்மட்டும் சிறந்த நடுவராகப் புகழ் பெற்றுவிட முடியுமா ? மனிதர் களுடைய குளுதிசயங்களையும் அவர்களது குண நலங்கள், உளப்பாங்கு பற்றியும் அறிந்து வைத்து, அவர்கள் ஆடுகின்ற நேரங்களில் பெறுகின்ற உணர்ச்சிகளுக்கு ஏற்ப நெளிந்து கொடுக்கும் தலைமைப் பண்பாளராகவும், உடல் திறம் கொண்டவர்களாகவும் விளங்கவேண்டும் ! இவ்வாறு, சிறப்பான பதவிகளிலும், பொறுப்பான கடமைகளிலும் சிறந்து விளங்கும் ஆற்றல்களிலும் தர முள்ளவர்களே நடுவராகப் பணியாற்ற முன் வருகின் ருர்கள்; "அன் ருட வாழ்க்கையின் கடுமைகளை அலட்சியப்படுத்தி, மறந்து, மன நிம்மதி பெறவும், புத்து ணர்ச்சியும் பூரிப்பும் பெறவுமே வருகிருேம்’ என்று நடுவர்கள் கூறுவது உண்மை தானே ! இத்தகைய அதிகார பூர்வமான கடமையுடன், உரிமை யுடன் தமது வேலை முடிந்து பறந்து வருகின்றவர்கள் வந்ததும் வராமலும் தமக்குரிய கடமைகளிலேயே தம்மை மறத்து மூழ்கி விடுகின்றனர். விளையாடுகின்ற ஆடுகள மைதானத்தை ஒரு முறை சுற்றிப்பார்த்து, அதில் குறித்துள்ள குறியீடுகளைக் கண் காணிக்கின் ருர்கள். ஆடுதற்கு மைதானம் தகுதியா என அறிந்த பிறகு, குறைகளிருந்தால் நிவர்த்தி செய்த பிறகு, தேவையானவற்றைத் தேடிச் சென்று தயார் செய்ய