பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

கின்றன என்று இங்லாந்தின் விளயாட்டறிஞர் ஒருவர் விளக்கிக் கூறுகின்றார்.

ஆகவே, விளையாட்டு வீரர்கள் இழைக்கின்ற தவறுகளைக் கண்டுபிடிக்காத சூழ்நிலையில், நடுவரால் கவனிக்க முடியாமல், இயலாமல் போய்விடுவதும் உண்டு. நடுவர் ஒருவரே என்பதாலும், எல்லாவற்றையும் அவரே கவனிக்க வேண்டியிருப்பதாலும், ‘விதிமீறல் நிகழ்ந்து தவறு நேர்ந்திருக்கிறது என்றாலும் அது எதிர்க்குழுவினரைப் பாதிக்கவில்லை. அத்துடன் பந்து அவர்கள் வசம இருப்பதால் சாதகமே’ என்ற நிலையிலும் நடுவர் மேம் போக்காகவும் அந்தத் தவறுதனை விட்டுவிடலாம்.

விளையாட்டிலே விற்பன்னராக விளங்கும் ஆட்டக்காரர்கள் கூட, எப்படியாவது எதிரிகளை ஏமாற்றி வென்று விடவேண்டும் என்பதற்காக, தன்னுள்ளத்தே மூண்டெழுகின்ற ஆர்வத்தால், மிகவும் தந்திரமாகத் தவறு இழைப்பதும், அதனை மற்றவர்கள் கூட்டமாககக் கூடி, நடுவர் பார்வைக்குப் படாதவாறு மறைந்து விடுவதும் அன்றாடம் ஆட்டத்தில் நடக்கின்ற நிகழ்ச்சிகளாகி இருக்கின்றன.

இன்னும் சிலர், தன் எதிர்க்குழுவினரால் அடிப்பட்டு, அதனால் மயக்கமடைந்தவர்போல நடித்துக் கீழ விழுந்து கிடந்து பாசாங்கு செய்வார்கள். இந்த சூழ்நிலையில் எதிரியை, நடுவர் ஆட்டத்தை விட்டு வெளியேற்றிவிடுவார் என்ற நம்பிக்கையில் இப்படி ஏமாற்ற முயல்வாரும் உண்டு.

நடுவருக்குள்ள ஒரு சில குறைகளை, இயலாமையை அறிந்துகொண்டு அதற்கேற்ப, தவறுகள் இழைப்பதையும், விதிமீறலைச் செய்வதையும் ஒரு சில ஆட்டக்காரர்கள் வழக்கமாகவே கொண்டிருக்கின்றார்கள்.