பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


7. டென்னிஸ் ஆட்டத்தின் கதை 1874-ம் ஆம் ஆண்டில் ஒரு நாள் அமெரிக்கத் துறை முகத்தில் அழகு நடைபோட்டுக் கொண்டிருந்த அனைவரின் கண்களும், அதிசயமான பொருள்களடங்கிய பெட்டி ஒன்றையே முற்றுகையிட்டுக் கொண்டிருந்தன. வேடிக்கை பார்த்துக் களித்தவர்கள் போக, வேதனைப்பட்டுக் கொண்டி ருந்தவர்களும் அங்கு இருக்கத்தான் இருந்தார்கள். சுங்க இலாகா அதிகாரிகள்தான் அவர்கள். பொருட்கள் புதுமை யானதாக இருந்தால், வரி எவ்வளவு விதிக்கலாம் என்ற முடிவுக்கு வர முடியாத அளவுக்குக் குழப்பம். கொண்டு வந்த குமரிக்கோ குழப்பத்திலும் குழப்பம், குதுாகலத்தோடு வந்தவளுக்கு வரி விதிப்புக் குறுக்கிட்டது மட்டுமல்ல, பொருளைக் கொண்டு போவதற்கும் பெருந்தடை ஏற்பட்டு விட்டது. வாரம் ஒன்று ஆனதற்குப் பிறகு, அவளது அண்ணன் எமிலியஸ் என்பவர் வந்தார். இந்தப் பொருட்கள் எல்லாம் அபாயகரமானவைகள் அல்ல. விளயாடுவதற்கு உதவுகின்ற சாதனங்களே ஆகும் என்று