பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56


விளக்கினார். இங்கிலாந்திலிருந்து இறக்குமதியான அந்தம் பொருட்கள், ‘ஸ்பெய்ரி ஸ்டைக்’ என்ற விளையாட்டுக்குரிய வலை, மட்டை, ஆணிகள், கம்பளிகள் இவைகள் தான்.

நியூயார்க் நகரிலிருந்து விடுமுறையை வளமாகக் கழிக்கச் சென்ற செல்வி அவுட்டர் பிரிட்ஜ் என்பவள், இங்கிலாந்து நகரிலே சுற்றுலா வந்தபொழுது, ஆங்கிலேயே ராணுவ அதிகாரிகள், ஏதோ முன்பின் கண்டறியாத ஒரு புது விளையாட்டைப் பெருமகிழ்ச்சியுடனும், புத்துணர்ச்சியுடனும் ஆடி மகிழ்வதைக் கண்டு, நெஞ்சைப் பறிகொடுத்து அங்கேயே நின்று விட்டாள்.

ஆட்டத்தைக் கண்ட ஆனந்த நிலையிலே, தனக்கும் கற்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள். அவர்களும் அக்கறையுடன் கற்றுத் தந்ததும், அவளிடம் வந்த அடக்கவொண்ணா ஆர்வமும். அமெரிக்காவுக்கு அந்த விளையாட்டை இறக்குமதி செய்யும் அளவுக்கு சிந்தையில் உற்சாகத்தை ஊட்டிவிட்டது. அதற்காக அவற்றை எடுத்து வந்தபொழுதுதான், அமெரிக்க சங்க இலாகா அதிகாரிகள் பட்டபாடும். மேரி பட்ட துயரும் முதலில் படித்த நிகழ்ச்சியாகும்.

இத்தனை சுவைமிக்க விளையாட்டு தோன்றிய நிகழ்ச்சியை இனி காண்போம்.

காண்பதற்குக் கவர்ச்சியாகவும், ஆடுதற்கு எளிமையாகவும். பயன்மிக்கதாகவும் இருந்த இந்த விளையாட்டு 1875 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் தோன்றியது என்று வரலாறு கூறுகின்றது. அந்த வரலாற்றைப் படைக்கும் பெருமை பெற்றவராக விளங்கிய வர் மேஜர் விங் பீல்டு என்பவரே ! டென்னிஸ் ஆட்டத்தின் தந்தை எனப் புகழ் பெற்ற அவர், இந்த விளையாட்டைக் கண்டுபிடிப்பதற்குரிய அடிப்படைக் காரணங்களும் இருக்கத்தான் இருந்தன.