பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


58 குழிக்குள் கோலிக் குண்டை உருட்டித் தள்ளி நம் நாட்டு சிறுவர்கள் ஆடுவார்களே. அதுபோல 9 குழி களுக்குள் உருண்டையான பந்தின மட்டை ஒன்றிகுல் தள்ளி ஆடும் ராக்கெட் என்ற ஆட்டம் இதன் பிறப்புக்குப் புத்துணர்ச்சியை அளித்தது. நடுவிலே வலை கட்டி, இருபுறமும் மாறிமாறி அடிக்கின்ற கோர்ட் டென்னிஸ்' என்ற ஆட்டம் இதன் பிறப்புக்குக் கருவாகி அமைந்தது, இந்தியாவிலே பிறந்து பெருமையுடன் விளங்கிய பூப் பந்தாட்டம் ஆங்கிலேய ராணுவ அதிகாரிகளுடன் இங்கிலாந்து சென்று பிரபலமாக அந்நாளில் ஆடப்பட்டு வந்தது, அந்தப் பூப்பந்தாட்டத்தில் உள்ள விதிமுறைகள், எண்ணிக்கை முறைகள் எல்லாம் ஆட்டத்திற்குள் புகுந்து ஆட்டத்தை உருவாக்கி விட்டன. இவ்வாறு, பல ஆட்டங்களின் தொகுப்பும் பகுப்பும், இணேப்பும் முனைப்புமே இந்த ஆட்டமாகி வந்தது 6τρότΩΙ பலர் சொன் லுைம், அந்நாளில் கைப்பந்து என்று ஆடப் பெற்ற ஒருவகை ஆட்டமே இதற்கு முன்னேடி என்பார்கள். கிரேக்கத்தில் ஆடிய விளையாட்டின் ஒரு பகுதியே இந்த டென்னிஸ் ஆட்டத்தின் பிறப்பு என்பார்கள். மேஜர் விங்பீல்டு, பெண்களை மகிழ்விக்கவும், தன் பணவீக்கத்தைப் போக்கிப் பெருக்கிக் கொள்ளவுமே இந்த விளையாட்டை ஆட வழி வகுத்தார் கண்டுபிடித்தார் என்ற ஒரு வரலாற்றுக் குறிப்பும் எழிலாக எடுத்துரைத்துச் செல்கின்றது. 1878ஆம் ஆண்டு ஆரம்பித்த தனது ஆட்டத்தை அந்த ஆண்டு நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவன்று தனது நண்பர்களுக்கும் அன்பர்களுக்கும் மேஜர் அதியற்புதமாக ஆடிக்காட்டினர், நண்பர் குழாம் அந்த விளையாட்டை விரும்பி ஏற்றுக்கொண்டாலும் 'ஸ்பெய்ரிஸ்டைக் என்ற அந்த கிரேக்கச் சொல்லே ஏற்றுக்கொள்ள அவர்கள் விரும்பவேயில்லை. வேறு பெயர் வைக்க வேண்டுமென்றே அவர்கள் வற்புறுத்தினர்கள்.