பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/62

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


8O யும் வைத்து அழுத்தித் தைத்துக் குதிக்க வைக்க முயன்றனர். பந்து கனமாக இருந்தது பாறைத் துண்டைப் போல் கனமாக இருந்தது என்பதால், கனமில்லாத பந்து ஒன்று: தேவைப்பட்டது. ரப்பரால் பந்து செய்யலாம் என்று கண்டு. பிடித்த பிறகு, அதற்கு மெல்லிய மூடி வைத்துத் தைத்து. ஆடினர். அடிப்பட்ட பந்துக்குள் காற்று புகுந்து, கொள்ளவே, அடிபட்ட பாம்பு சீறுவது போல அடிக்கடி சத்தம் கிளம்பியதால் சிவப்பு ரப்பரால் பந்து செய்து அதன் வலிமைக்கும் உழைப்புக்கும் ஏற்றவாறு நைலான் டெக்காரன் போன்றவற்றைக் கலந்து கொண்டு, புதிய முறையில் இன்றைய நிலையில் உள்ள பந்தினை உருவாக்கி ஆடி மகிழ்ந்தனர். பந்து வளர்ந்தது போலவே, அடித்தாடும் மட்டையும் உருவாகத் தொடங்கியது, முதலில் பந்தை வெறும் கைகளாலே அடித்துக் குத்தி விளையாடினர். ஆரம்பத்தில் ஆனந்தமாகவே இருந்தது. போகப்போக கைகளில் வலி எடுக்கவே கையுறைகளை அணிந்துகொண்டு ஆடத் தொடங்கினர். அப்படியும் வலி ஏற்படவே வெறும் நீண்ட, கம்புகளே வைத்து அடித்தாடினர். குறி அதில் சரியாக வரவில்லை என்பதால்தான், உள்ளங்கை அகலம் விரிந்து இருப்பதுபோன்று நீண்ட கம்பிகளையும் அதன் தலைப். பாகம் விரிந்துள்ளதைப் போலவும் அமைத்துக்கொண்டு ஆடினர். 'ராக்கெட்" என்ற அராபியச் சொல்லுக்கு 'உள்ளங்கை' என்று பொருளாகும். முதலில் உள்ளங்கையில் பந்தை அடித்து ஆடியதால்தான் மட்டைக்கு இந்த பெயர் வந்தது. அதாவது ராகெட் என்ற சொல் ஆங்கிலத்தில் ராக்கெட் டாக மாறியது,