பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


6.1 வெறும் மரத்தாலான மட்டையில் பந்தை அதிவேகமாக அடிக்க முடியவில்லை என்பதளுல் மட்டையின் அகலப் பகுதிக்குள்ளே நரம்புகளை வைத்துக் கோர்த்து இழுத்துக் கட்டி "ராக்கெட்' என்ற பெயரிட்டு ஆடினர் ஆட பத்தும், அடித்தாட மட்டையும் வந்துவிட்ட பொழுது, எந்த உடை அணிந்துகொண்டு ஆடவேண்டும் என்று அவர்கள் அலட்டிக்கொண்ட விதம் மிகவும் விநோத மாகவே இருந்திருககிறது. முதலில் பெண்கள் படுத்திய பாட்டைப் பார்ப்போம். ஆடுகளத்தில் ஆடுவதற்கு என்று வந்த பெண்கள் தங்கள் பணககார பாரம்பரியத்தைக் காட்டுவதற்காகத் தரையைக் கூட்டும் அளவுக்குத் தாழ்ந்து தவழ்ந்த கவுன மாட்டிக்கொண்டு, பின்னல் தொங்கிப்புரளும் மேலுடைகள் அத்தனையையும் ஒரு கையால் தூக்கிக்கொண்டு மற்ருெரு கையில உள்ள மட்டையால் பந்தாடினர். அது வசதியாக இல்லை என்றதால எலின்' என்ற பெண்மணி கணுக்கால் வரை உள்ள கவுன் அணிந்து வந்து ஆடியது கண்டு அனைவரும் அம்முறையைத் தொடர்ந்தனர். மீண்டும் ஒரு புரட்சி. முழங்காலுக்கு கீழே இருந்தால் சிறிது வசதியாக இருக்கும் என்று மோலா" என்ற பெண்மணி, கவுன் அணிந்து வந்தாள். அதுவும் சங்கடமாக இருக்கிறது என்பதால பிடித்துக் கொண்டு காலோடு காலாக ஒட்டியிருக்கும் "ஸ்டாக்கிங்ஸ் அணிந்து கொண்டு ஆட முயன்றனர். அது இல்லாமல் ஆடவே கூடாது என்றும் விரும்பினர். ஆளுல் நடந்ததோ வேறு. ஹெலன் ஜேக்கப் என்னும் வீராங்கன, வெறுங்கா லோடு காலுறையின்றி கவுன் அணிந்து வந்ததால் அந்த முறையும் மாறிற்று. அனைவரும் பின்பற்றினர்.