பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


68 என்பவர் இவ்விளையாட்டிலே ஈடுபட்டுத் தன்னையே இழந்து விட்டு இன்பத்தில் மிதந்தபொழுதுதான். அகில உலகப் போட்டி ஒன்றை நடத்தவேண்டும் என்று அவர் ஆசைப் பட்டார். தன் பெயராலேயே டேவிஸ் கோப்பை ஒன்றை வழங்கி 1900ஆம் ஆண்டு தொடங்கி விட்டார். அதன் வழியே இன்று அனைத்துலக நாடுகளும் ஆர்வமுடன் போட்டியிட்டு பேரின்பம் காணுகின்றன. விளையாட்டுக்களை விநயமுடன் ஆடிக் களிக்க, முதலில் தேவை நலமான உடலே வேண்டும். நலமான உடலை நயமான முறையில் பெற நாளெல்லாம் உதவுவது உடற்பயிற்சியே யாகும். உடற் பயிற்சியின் உண்மை நிலை புரியாது உளறும் நண்பர்களுக்கு, அதன் உயர்ந்த தன்மையின் விளக்கத்தை அடுத்து வரும் கட்டுரையில் காண்போம்,