பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

யாரோ ஒருவர் அவசரமாக சாப்பிடும்போது சோறு விக்கிச் செத்தான் என்றால், “சாப்பிட்டால் விக்கிக் கொள்ளும்; நாமும் செத்து போவோம்” என்று யாரும் சாப்பிடாமல் இருப்பதில்லை. பட்டினி கிடந்து பாழாவதில்லை. ரயில் பிரயாணத்தில், தடம் புரண்டால் நசுங்கிப்போய் விடுவோம் என்று பயந்து கொண்டு யாரும் ரயில் பிரயாணத்தை நிறுத்தியதில்லை. நிர்தாட்சண்யமாகப் பேசியதுமில்லை.

ஆகவே, செய்பவரிடம்தான் பழுது இருக்கிறதே தவிர; பயன்தரும் பொருளிடத்தில் அல்ல என்பதை நாம் முதலில் உணரவேண்டும்.

இரும்பு கோனினால் எதற்கும் பயன்படும், கரும்பு கோணினால் அது தன் சுவையில் குன்றாது. அரும்பு கோணினால் மணட்டதை மறக்குமோ! ஆனால் நமது நரம்பு கோணினால் என்ன நடக்கும் என்பதை கொஞ்சம் சிந்தித்தும் பாருங்கள்.

உடற்பயிற்சியின் நோக்கமானது, நரம்புகளே இரும்பென வலிமையூட்டவும் , அரும்பெணமணக்கவும், கரும்பென சுவைக்கவும் போன்ற தன்மையில் செயல்படுவதே தவிர வேறு எதற்கும் அல்ல என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

உடற் பயிற்சியானது உடல் உறுப்புக்களின் இயக்கத்தோடு, சுவாச முறையில் மேலும் விருத்தியடையச் செய்யும் அரிய முயற்சியில், வெளியில் திரியும் வளியினை வாங்கி, வயத்தில் அடக்கி நிலைத்திருக்கிற பயிற்சியாகச் செய்யப்படுகிறது. அதாவது, வெட்ட வெளியிலே உலா வரும் காற்றினை அதிக அளவில் உள் மூச்சாக இழுத்து, லாவசமாக அடக்கித் தேவையில்லாத காற்றை வெளியே விட்டு விட்டால், பளிங்காக உடல் பளபளக்கும். உரோமம் கறுக்கும்; உறுப்புச்