பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


முன்னுரைவிளையாட்டுத்துறை தமிழ் இலக்கிய நூல் வரிசையில் இந்நூல் எனது 12வது நூலாக உங்கள் கையில் தவழ்கிறது.

இதயத்தில் இன்பத்தை விளைக்கின்ற நிலமாக, உணர்ச்சிகளில் உற்சாகத்தை ஊட்டுகின்றகளமாக. வாழ்க்கையில் வானமுத விருந்தளிக்கும் தலமாக விளையாட்டுக்கள் விளங்கி வருகின்றன.

விருந்தளிக்கும் விளையாட்டுக்கள், சில நேரங்களில் மனிதருக்கு விநோதங்களை அளித்து வேடிக்கைக் காட்டி யிருக்கின்றன.

வெறியைக் கிளப்பி வீறிடச் செய்திருக்கின்றன. கொடுமைகளை உயர்த்திக் கொடிகட்டிப் பறக்கவிட்டிருக் கின்றன.

அமைதியையும் ஆனந்தத்தையும், அதே நேரத்தில் அருவெறுக்கத்தக்க நிகழ்ச்சிகளையும் பற்றிய விளையாட்டுக் குறிப்புக்களை குறிகாட்டிச் சென்றிருக்கின்றன. சரித்திர நிகழ்ச்சிகள்.