பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

73

உணவு இப்பொழுது கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஏங்கியது. உண்டுவிட்டால், இந்த தரையே போதுமே உறங்க என்று எண்ணித் தடுமாறியது. என்ன ஆச்சரியம் ? வாழை இலை விரிக்கப்பட்டு. வளமான உணவு அதன் மீது அழகுறப் படைக்கப்பட்டிருந்தது. வகைகளைக். கண்டான். வாயாற உண்டான்; மகிழ்ந்தான்.

வயிறு நிறைந்தது. தரையில் படுக்க எண்ணிய நெஞ்சம் தடுமாறியது. ஏதாவது கட்டில் மெத்தை இருந்தால், களைப்பும் தீரும். கண்ணுறங்கவும் கூடும் என்று கருதினான். என்ன ஆச்சரியம் ! இலவம் பஞ்சு மெத்தை தோற்பது போல எழிலான மெத்தையுடன் ஒரு கட்டில் எதிரே கிடந்தது.

காலை நீட்டிப் படுத்தான். கால்களில் வலி மிகுந்திருந்தது. கன்னியர் நால்வர் கூடி அமர்ந்த கால்களைப் பிடித்து விட்டால் எவ்வளவு சுகமாக இருக்கம் என்று நினைவை மேயவிட்டான். என்ன ஆச்சரியம் ! தேவலோக அழகியர் போன்ற நால்வர் அவனைச் சுற்றி அமர்ந்து, தேகத்தை மலரைப் போன்று வருடியவாறு, இதமாகப் பிடித்த விட்டுக் கொண்டிருந்தனர். யார் முகத்தில் விழித்தேனோ? நினைத்ததெல்லாம் நடக்கிறதே என்று நெஞ்சம் நெகிழ்ந்தான். நீராய் நெக்குருகிறான், நிலை மறந்தான். ஆனாலும் உறங்கினானில்லை.

இன்னும் நினைவகளை நெஞ்சம் அடைக்காமல் நீட்டி விட்டது. இவ்வளவு சுகமாக நாம் இருக்கும்போது... அசை போட்டது ஆசை.

அறுசுவை உண்டி, அகம் குளிரும் தென்றல். அருமையான படுக்கை, அருகிலே அழகியர் கூட்டம்...இப்படி இருக்கும் இந்த நேரத்தில் புலி வந்தால் என்ன செய்வது? நினைத்ததுதான் தாமதம். புலி வந்தது, பாய்ந்தது, அவனைக் கொன்றது. தின்றது, சென்றது. பாவம் ! அவனுக்குத்