பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/76

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


74 தெரியாது அவன் படுத்திருந்த மரத்தின் நிழல் தந்த இடம்: தங்கியிருந்த மரம் கேட்டதையெல்லாம் கொடுக்கக்கூடிய சக்திவாய்ந்த கற்பக மரம் என்று. அனுபவிக்கக் கொடுத்து வைக்காமல் அகால மரணமடைந்து விட்டானே ! இப்படித் தான் இருக்கிருர்கள் நமது மக்களும். கேட்டதை யெல்லாம் கொடுக்கின்ற, சகல சக்தியையும் படைத்தது நமது உடல் என்று யாருமே நினைப்பதுமில்லை. நினைத்தாலும் நம்புவதில்லை. "உயிரெனும் சரக்கிணைக் கொள்ளும் காயப்பை, இது மாயப்பை" என்று மடத்துச் சாமியார்களைப்போல, வீணே பேசிப் பொழுதைப் போக்கு கின்றனர்.பலர். இது காயப்பை மட்டுமல்ல; சகலவித இன்பங் களையும் தருகின்ற சகாயப்பை என்பதை ஏனே எல்லோரும் நினைகக மறந்து விடுகின்றனர். சிற்றெறும்பு ஆதியாக சிவகோடிகள் ஆயிரங்கோடி இந்த உலகில் இருந்தும். நிமர்ந்து நேராக நிற்கவும், நினைத்து மகிழவும், மகிழ்வுடன் பேசவும், வாயாறச் சிரிக்கவும் போன்ற அற்புதமான அரிய உடலைப் பெற்றிருப்பது மனித இனத் தானே, அரிதரிது மானிடராகப் பிறத்தல் அரிது என்பதையும் மாம அறிநததுதானே ! அததகைய அரிய உடலை அனுதினமும் நாம் காக்கா விட்டால, என்ன ஆகும் ? 'உடம்பால் அழியில் உயிரால் அழிவா. திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்”என்பதை உணர்ந்து கூறய திருமூலர் மேலும் பாடுகிருர், 'உடம்பை வளாக்கும உபாயம அறிந்தே, உடம்பை வளர்த்தேன் உயிர் வளாத்தேனே' விணுக உடம்பை வளர்ப்பானேன்! மண் தின்னப் போகும் மனித உடலுக்கு என்ன காப்பு வேண்டிக் கிடக் கிறது ? எனறு வாதாடுவோர் உண்டு. இருக்கும் வரை சிறகக வழியிலலாமல் அழுக்கில் புரண்டு அழுகியா சாவது? இது அறிவுடையோர்க்கு அழகாகுமா? அழகான உடலம்