பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/77

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


75 பெற்ற ஆறறிவு படைத்த மனிதர்கள் அருமையாக அல்லவா காக்க வேண்டும் ? புனிதம் நிறைந்ததாக அல்லவா தினமும் வாழவேண்டும் என்று கேட்கின்ற சித்தர் கூறும் காரணத் தைப் படியுங்கள். உடம்பினுள்ளே உத்தமன் கோயில் கொண்டான் என உடமயை வளர்த்தேன் உயிர் வளர்த் தேனே : நாயகன் நமது உடலுக்குள்ளேயே வருகிருன், வாழ் கிருன் என்ருல் நாமெல்லாம் எவ்வளவு நாணயமாக வாழ வேண்டும் ? உடலின் இத்தகைய மகிமையை உணராமல்; நாய்க்குக் கிடைத்த தேங்காயை உருட்டிக் கிடப்பது போல நாளெல்லாம் நாம் வாழலாமா ? 'கூறுங்கலைகள் பதினெட்டும் ஊறும் உடம்பு" என்று நமது உடலேப் புகழ்ந்து பாடுகின்ருர் சித்தர். 'ஒத்துப் பொறியும் உடலும் இருக்கவே, செத்துத் திரியும் மக்களாகவே எல்லோரும் வாழ்ந்து இறக்க வேண்டும் என்பது விதியல்ல. வேதாந்தமுமல்ல. உடலை வைத்தேதான் இந்த உலக வாழ்க்கையே இருக்கிறது. இத்தகைய நடமாடும் இந்த அற்புத மாளிகையை, அழகிய பசு ஒசோகலயை, ஆனந்த உலகைப் பாதுகாத்துக் கொள்ளாவிட்டால், மனதிலே வேதாளம் சேரும். நினேவிலே நிச்சயம் வெள்ளெ ருக்குப் பூக்கும். போகும் பாதையெல்லாம் பாதள மூளி படருமே ! நாளும் பல பிணி ஒடி வந்து சரண் புகுமே உடலில், நோய் நுழைந்த உடற்கூட்டில். நிறைந்து கிடக்கும் நீடுகலை, கல்வி, நீள்மேதை, கூர்ஞானம் அழியும். பிறந்த குலம் மாயும். பேராண்மை ஒயும், பிறகு, அவலமாக அல்லவா இந்த அற்புத உடல் அழிந்தொழியும். ஓராயிரங்காலம் தவமிருந்து பெற்று, வாராது வந்த மாமணியைப் பாராது. எங்கே வருங்கால மக்கள் அழ்ந் தொழிந்து விடுவார்களோ என்று முக்காலமும் உணர்ந்தே தான் பாடிச் சென்றிருக்கின்ருர் சித்தர்.