பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76


"தன்னை யறியும் அறிவை அறிந்தபின் தன்னையே அர்ச்சிக்கத் தானிருந் தேனே" "ஊனுடம்பாலயம், உள்ளம் பெருங்கோயில், வள்ளல் பிராளூர்க்கு வாய் கோபுர வாசல், தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்' என்று பாடியவர் தன்னையே பூசை செய்யும் அறிவினைப் பெற்றதெவ்வாறு? சீரிய சிந்தனைக்குப் பின் வந்த தெளிவல்லவா இது ? தனது தேகத்தைத் தானே அர்ச்சிக்கத் தொடங்கி விட்டது தகைமை யல்லவா ! மாடு ஆடு மரித்தால், தோலாலும் கொம்பாலும் பயன் படும். ஓடாகப் பயன்படுமே மண்பானை உடைந்தால். வீடு கூட இடிந்தால் கழுதை ஒதுங்க இடந்தருகிறது. காடு விழுந்தால் மரம் கிடைக்குமே ! அதேபோல் நமது உடற்கூடு மடிந்தால் எதற்குப் பயன்படுகிறது ? மரம், செடி கொடி, வீடு, குளம், பாலம் இவைகளைப் பார்த்து, இத்தனை நாள் இவ்வளவு ஆண்டு இருக்கும் என்று கணக்கிட்டுக் கூறுகின்ற மனிதர்களின் வாழ்நாளே எத்தனை நாள் என்று யாரால் உறுதியாகக் கூறமுடியும் ? முற்றியபின் கனியுதிரும். பழுப்புற்றால் இலையுதிரும். எண்ணெய் வற்றிய பின் விளக்கவியும். இந்த உடல் என்று அவியும் என்று யாருக்குத் தெரியும் ! மலர் பறிக்க ஒரு நேரம். வயலிலே நெல்லறுக்க ஒருகாலம். மரமறுக்க ஒரு காலம். ஆனால் நம், உயிர் எனும் கயிற்றுக்க காலன் வரும் காலம் எந்தக் காலம் ? இப்படியெல்லாம் எத்தனைக் கவிஞர்கள் குத்திக் காட்டிச் சென்றிருக்கின் றார்கள். இவ்வாறு இருக்கின்ற வாழ்வுதனைக் கைநீட்டிக் காட்டி விட்டுத்தான், சிறக்க வாழவேண்டும். சிந்தனையுடன் வாழ: வேண்டும். இருக்கும் காலம் வரை இன்னலையூட்டும் நோயின்றி வாழவேண்டும் என்ற அக்கறையை அறிவுள் ளோருக்கு ஊட்டத்தான், தன்னையறியும் அறிவு வந்தபின்,