பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/81

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


10. விளையாட்டுக்களில் விநோதங்கள்! இந்திய நாட்டு மக்களுக்கு இனிக்கும் செய்தி அது ? இதயம் குளிர வந்த செய்தியினைத் தந்தவர்கள் மூகம் பார்க்க. பாரதமே ஆவலுடன் எதிர்நோக்கிகொண்டிருந்தது. இங்கிருந்து இங்கிலாந்து சென்ற கிரிக்கெட் குழுவினர். எல்லோரும் பாராட்டும்படி விளையாடி வெற்றி பெற்ற சுவையான சேதிதான், உலக மக்களையே வாயாரப் புகழ வைத்த அந்த வெற்றி, உறவுக்குரிய பாரதத்தாரை எப்படி உணர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் ? வெற்றி பெற்ற வீரர்களை ஏந்திக்கொண்டு வந்த விமானம் பம்பாயில் தரை இறங்கியபோது, தரையில் இருந்து கிளம்பிய வாழ்த்தொலியும் வெற்றிச் சிரிப்பும் விண்ணக் குடைந்தது. வாய்வலிக்கும் அளவுக்கு வாழ்த் தொலி எழுப்பினர் பலர்; வசதியுள்ளவர்கள். மால சூட்டி மகிழ்ந்தனர். விளையாட்டில் வேகமும் வெறியும் உள்ள வர்கள் மோதிரமே அணிவித்து மனநிறைவு பெற்றனர்.